For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொய்ங்ங்ங்ங்....6 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சோயுஸ்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: 3 விண்வெளி வீரர்களுடன் கிளம்பிய ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம், முதல் முறையாக மிக குறுகிய நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதாவது 6 மணி நேரத்திலேயே அது போய் விட்டது.

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் காஸிடி, ரஷியாவைச் சேர்ந்த பாவல் வினோக்கிரடாவ் மற்றும் அலெக்ஸாண்டர் மிஸ்குரின் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர்.

சோயுஸ் விண்கலம் சரியாக இந்திய நேரப்படி நேற்று காலை 4.30 மணிக்கு பெரு நாட்டிற்கு அருகில், பசிபிக் பெருங்கடலுக்கு மேலே நிலை கொண்டிருந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

சூப்பர் வியூ....

சூப்பர் வியூ....

அங்கிருந்து பூமியை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக நாசா டிவிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார் வினோக்கிரடாவ். 59 வயதான இவர் 1997 மற்றும் 2006ம் ஆண்டு என இருமுறை விண்வெளி நிலையத்திற்குப் போய் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சு மாசம் அங்கதான்...

அஞ்சு மாசம் அங்கதான்...

தற்போது புதிதாக சென்றுள்ள இந்த மூவர் ஐந்து மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.

வெல்கம் பார்ட்டி...

வெல்கம் பார்ட்டி...

ஏற்கனவே கடந்த டிசம்பர் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டாம் மாஸ்பர்ன், ரஷியாவை சேர்ந்த ரோமன் ரோமனென்கோ மற்றும் கனடாவைச் சேர்ந்த சிரிஷ் ஹேட்பீல்ட் ஆகியோர் இருந்து வருகிறார்கள். அவர்கள் புதிதாக வந்த மூவரையும் கட்டித் தழுவி வரவேற்றனர்.

உண்மையான ஸ்டார்...அம்மாவின் மகிழ்ச்சி

உண்மையான ஸ்டார்...அம்மாவின் மகிழ்ச்சி

வினோக்கிரடாவ் விண்வெளி நிலையம் சென்றது குறித்து அவரது தாயார் பெருமையுடன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கூறியதாவது, ‘நீ தான் உண்மையான ஸ்டார். உன்னைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்று மகனைப் பாராட்டினார்.

அப்போ 50... இப்போ 6...

அப்போ 50... இப்போ 6...

மிகக்குறைந்த நேரத்தில் இவர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்தை சோயுஸ் விண்கலம் அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் சென்றவர்கள் சுமார் ஐம்பது மணி நேர பயணத்திற்குப் பிறகே, இலக்கை அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்வலி குறைவு:

உடல்வலி குறைவு:

இதுகுறித்து வினோக்கிரடாவ் கூறும்பொழுது, ‘ பயண நேரம் குறைந்ததன் மூலம், விண்வெளி வீரர்கள் களைப்படைவதும், சோர்வடைவதும் தடுக்கப்பட்டிருக்கிறது' , என்றார்.

English summary
Soyuz spacecraft docks at ISS after just six hours Moscow: A Soyuz capsule carrying three astronauts successfully docked today with the International Space Station, bringing the size of the crew at the orbiting lab to six. Chris Cassidy of the United States and Russians Pavel Vinogradov and Alexander Misurkin travelled six hours in the capsule before linking up with the space station's Russian Rassvet research module over the Pacific Ocean, just off Peru, at 04:35 GMT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X