For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலையை மூடியதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடும்பத்துடன் தூத்துக்குடியில் பேரணி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி ஆலையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் தங்களது குடும்பத்தினருடன் இன்று பேரணி நடத்தினர்.

விஷவாயு வெளியேறியைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நேற்று மூடப்பட்டது. அந்த ஆலையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் ஆலையை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை வலியுறுத்தி இன்று ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பேரணியாக புறப்பட்டு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆலையை திறக்க கோரி துணை வட்டாட்சியர் ராமசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் தொழிலாளர்கள் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறோம். திடீரென ஆலை முடப்பட்டு விட்டதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை என்றாலும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

English summary
Thousands of Sterlite workers conducted a rally in Tuticorin with their family members seeking to open the closed factory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X