ஹைதராபாத்தில் ஒரு 'நவீன நல்ல தங்காள்': குடிபோதையில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றார்
ஹைதராபாத்: குடிபோதையில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றினர்.
பட்டினியால் குழந்தைகள் கதறுவதை காண சகிக்காமல், அவர்களை கிணற்றில் தூக்கிப்போட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட நல்ல தங்காள் கதையை சிலர் அறிந்திருக்கலாம்; பலர் அறியாமலும் இருக்கலாம்.
அதே போன்றதொரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது. இது வறுமையினால் வந்த வினையல்ல; போதையினால் ஏற்பட்ட விளைவு.
ஆந்திர மாநிலம், நவாப் பேட்டை மண்டலம், ரேகுலாசவுகாபூரை சேர்ந்த ஒரு பெண், நேற்று மாலை 4 மணியளவில் ஷில்பா (7), அக்னி (6), சரண் (2) ஆகிய தனது 3 குழந்தைகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்தாள்.
இதை கண்ட கிராமவாசிகள் கிணற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பிணங்களாக தான் அவர்களை மீட்க முடிந்தது. 3 பச்சிளம் தளிர்களின் மரணத்திற்கு காரணமான அந்த பெண் மட்டும் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
அந்த பெண்ணின் கணவர் டிரைவராக வேலை செய்வதாகவும், அவர்களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போன அவர், மனக் குழப்பத்தில் இந்த மாபாதக வேலையை செய்திருக்கக் கூடும். கிணற்றில் குழந்தைகளை வீசிய போதும் அவர் முழுபோதையில் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications