For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசை கவிழ்க்க ஒரு மூத்த தலைவர் முயற்சித்தார்: கத்காரி புது குண்டால் பரபரப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Nitin Gadkari
நாக்பூர்: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்ப்பதற்காக 'ஒரு மூத்த' தலைவர் தம்மை அணுகியதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி.

நாக்பூரில் நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவராக நான் இருந்த போது ஒரு மூத்த தலைவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்ப்பது தொடர்பாக என்னை அணுகினார். ஆனால் நான் ஒரு கொள்கை வழி நடப்பவன். எதைச் செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேனே தவிர முதுகில் குத்த மாட்டேன் என்று கூறிவிட்டேன். பாரதிய ஜனதாவில் தற்போது எதுவுமே தவறாக நடக்கவில்லை என்றார்.

இருப்பினும் யார் அந்த மூத்த தலைவர் என்பதை தெரிவிக்க நிதின் கத்காரி மறுத்துவிட்டார். இதனால் பல்வேறு யூகங்கள் எழுந்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Former BJP president Nitin Gadkari has claimed that a "senior leader" had approached him to topple the Congress-led UPA-II government at the Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X