For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்காசியில் கேஸ் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல், குடோனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசியில் கேஸ் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திய அரசு உணவு பாதர்த்தங்கள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக பல்வேறு விதிமுறைகளை அடங்கிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதற்காக நகராட்சி, ஓன்றிய அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இநநிலையில் தென்காசி உணவு பாதுகாப்பு அலுவலர் முகமது ஹக்கிம், ஒன்றிய அலுவலர் முகைதீன், கடையநல்லூர் அலுவலர் மகேஷ், செங்கோட்டை ஒன்றிய அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தென்காசி நகரில் உள்ள பழக்கடைகள், குளிர்பான கடைகள், சாலையோர கடைகள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர்.

தென்காசி சீவலப்பேரிகுளம் எதிரிலுள்ள பழக்கடையில் எத்தினியம் என்னும் கேஸ் மூலம் பழுக்க வைக்கப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மாம்பழங்கள் 1 டன் எடையுள்ளவை பறமுதல் செய்யப்பட்து. மேலும் குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. இது தவிர சரியாக மூடப்படாமல் வெயில் படும்படி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல கடைகளில் சோதனை நடத்தி கலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

English summary
Officials seized 1 tonne artificially ripened mangoes and sealed the godown in Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X