For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிஹாட் ஏர்வேஸுடம் 24% பங்குகளை ரூ2,058 கோடிக்கு விற்க ஜெட் ஏர்வேஸ் நிர்வாகக் குழு ஒப்புதல்!

By Mathi
Google Oneindia Tamil News

Jet Airways board clears sale of 24 per cent stake to Etihad
மும்பை: அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ2,058 கோடிக்கு 24% பங்குகளை விற்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஜெட் ஏர்வேஸின் நிர்வாகிகள் கூட்டத்தில் 2.72 கோடி பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஒரு பங்கின் மதிப்பு ரூ744.73 ஏன நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு பங்கு சந்தைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 49% அன்னிய நேரடி முதலீட்டுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதித்த பின்னர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முதல் முறையாக இந்தியாவில் தற்போதுதான் முதலீடு செய்கிறது.

கடந்த சில மாதங்களாக எதிஹாட் ஏர்வேஸுக்கும் ஜெட் ஏர்வேஸுக்கும் இடையே பங்கு விற்பனை தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர்களையும் இரு நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்திருந்தனர். இருப்பினும் பங்குகளை மாற்றுவது தொடர்பாக இழுபறி நீடித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

English summary
The board of directors of Jet Airways (India) has approved a proposal to allot 24 per cent stake to Etihad Airways PJSC of Abu Dhabi for Rs. 2,058 crore ($379 million).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X