For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?

Google Oneindia Tamil News

Man finds he is a woman after doctor visit
ஹாங்காங்: பிறந்தது முதல் 66 வருடமாக ஆணாக வாழ்ந்து வந்த ஒருவரைப் பார்த்து நீங்க ஆண் இல்லை பெண் என்று சொன்னால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் அதிர்ச்சியாகிப் போய் விட்டது இந்த ஹாங்காங் தாத்தாவுக்கும்.

ஹாங்காங்கைச் சேர்ந்த 66 வயது நபருக்கு உடம்பு சரியில்லை. வயிறு வீங்கிக் காணப்பட்டது. இதையடுத்து அவர் டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டாராம் தாத்தா.

அந்த தாத்தாவின் வயிறு வீக்கத்திற்குக் காரணம் அவரது கர்ப்பப் பையில் ஏற்பட்டிருந்த கட்டிதானாம்... அதாவது அந்த நபர் உண்மையில் ஆண் அல்ல, மாறாக பெண்.

அதேசமயம், அவர் ஆணாகத்தான் காட்சி அளிக்கிறார். என்ன குழப்பமாக இருக்கிறதா... அதாவது அந்த நபருக்கு 2 விதமான மரபணுப் பிரச்சினை இருக்கிறது.

அதில் ஒன்று டர்னர் சின்ட்ரோம். இது பெண்களுக்கு வரக் கூடியது. அது இந்த தாத்தாவுக்கு உள்ளது. டர்னர் சின்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். மேலும் குள்ளமாகவும் இருப்பார்கள். இந்தப் பிரச்சினை இந்த தாத்தாவுக்கு இருக்கிறது. இது மரபணுப் பிரச்சினையாகும்.

இன்னொரு மரபணு பிரச்சினை என்னவென்றால், ஹைபர்பிளாசியா. அதாவது ஆண் ஹார்மோன் அதிகரித்துக் காணப்பட்டால் அந்தப் பெண்கள், ஆண் தன்மையுடன், ஆண் போலவும் காணப்படுவார்கள். தாடி வளரும், ஏன், சிறிய அளவில் ஆணுறுப்பும் கூட வளர்ந்து வரும். அந்தப் பிரச்சினை இந்த தாத்தாவுக்குஉள்ளது. இதனால்தான் அவர் ஆண் போல காட்சி தந்துள்ளார்.

இந்த தாத்தாவை 7 டாக்டர்கள் சேர்ந்து பரிசோதித்து அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

இந்த தாத்தா சிறு வயதிலேயே யாருமில்லாமல், அனாதரவாக வளர்ந்துள்ளார். ஆண் போலவே வளர்ந்துள்ளார். இவருக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் குறித்து இவருக்குத் தெரியவில்லை. எந்தவிதமான மருத்துவப் பரிசோதனையையும் இவர் செய்து கொள்ளவில்லை. இதனால் தான் ஒரு பெண் என்பதே தெரியாமல் இத்தனை காலத்தை கடந்து விட்டார் அந்த நபர்.

4.5 அடி உயரமுடைய இந்த நபர், சிறு வயது முதலே தானாக சிறுநீர் போகும் குறைபாடும் இருந்துள்ளது. ஆனால் 10 வயதில் அது நின்று விட்டது.அதாவது இவர் பூப்படைந்துள்ளார். அதன் பிறகு இந்தப் பிரச்சினை போயுள்ளது.

மருத்துவ உலகில் இப்படி இரு வேறு விதமான மரபணுப் பிரச்சினைகள் ஒரே நபரிடம் இருப்பது மிக மிக அரிதான விஷயமாம். 2500 முதல் 3000 பெண்களில் ஒருவருக்குத்தான் டர்னர் சின்ட்ரோம் பிரச்சினை ஏற்படுகிறதாம்.

சம்பந்தப்பட்ட தாத்தா அடிப்படையில் சீனர் ஆவார். இவர் பிறந்தது வியட்நாம் நாட்டில்.

இத்தனை காலமாக தான் யார் என்பதே தெரியாமல் ஒருவர் வாழ்ந்து வாழ்க்கையின் கடைசிக் கட்டத்திற்கு வந்திருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

English summary
A 66-year-old who lived his whole life as a man was given a surprising diagnosis after visiting the doctor in Hong Kong with a swollen abdomen - he was a woman. Doctors realised the patient was female after they found the swelling came from a large cyst on an ovary, the Hong Kong Medical Journal reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X