For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா எப்போ தூக்கிக் கொஞ்சுவாங்கனு 2 மாத குட்டிப்பாப்பாவுக்கு தெரியுமாம்...

Google Oneindia Tamil News

லண்டன்: இரண்டு மாத குழந்தைகளுக்கு அம்மா தன்னை எப்போது தூக்கிக் கொஞ்சுவார் என்பது நன்றாக தெரியும் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாசு ரெட்டி, தனது ஆய்வின் முடிவில், பிறந்து இரண்டு முதல் நான்கு மாதங்களே ஆன இளம் சிறார்களுக்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளாஇப் புரிந்து கொள்ள இயலும் எனத் தெரிவித்துள்ளார்.

அதுவும் அம்மா அருகில் வருகிறார் என்றால், தன்னைத் தூக்கி கொஞ்சுவதற்கோ அல்லது உணவு கொடுப்பதற்கோ தான் வருகிறார் என்பது அந்த குட்டிகளுக்கு நன்றாகவே புரியுமாம். எனவே, அதற்குத் தக்கவாறு உடலை விரைப்பாக்கி, தோள்பட்டையைத் தூக்கி அம்மா தூக்குவதற்கு வசதியாக ரெடியாகி விடுமாம் பாப்பா.

குட்டிப்பாப்பா...

குட்டிப்பாப்பா...

புதிதாக பிறந்த குழந்தைகளின் உடல் அசைவுகள், ஒத்துழைப்புகள் மற்றும் சமாளிப்புகள் பற்றி ஆய்வு செய்யப்படுவது இது தான் முதல் முறையாம்.

நல்ல சுதாரிப்பான குழந்தை...

நல்ல சுதாரிப்பான குழந்தை...

ஆய்வின் முடிவுகளைப் பார்த்து ஆராய்ச்சியாளரே அசந்து விட்டாராம். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு இத்தனை சுதாரிப்பு இருக்கும் என அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.

வளர்ப்பு முறையை மாற்ற வேண்டுமாம்....

வளர்ப்பு முறையை மாற்ற வேண்டுமாம்....

ஆய்வின் முடிவுகளில் இருந்து தெரிய வந்திருக்கும் மற்றொரு விஷயம், நாம் குழந்தை வளர்ப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது என்பது என தெரிவித்துள்ளார் ர்ட்டி. ஏனென்றால், குழந்தைகளுக்கு இவ்வளவு குறுகிய மாதங்களில் தன்னைச் சுற்றி நடப்பது புரிகிறது என்றால், நாமும் அதற்குத் தகுந்த படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.

ஆட்டிசம் கண்டறியலாம்...

ஆட்டிசம் கண்டறியலாம்...

இந்த ஆய்வின் மூலம் ஆட்டிசம் போன்ற வளர்ச்சிக் குறைபாடு நோய்களை எளிதில் கண்டறியலாமாம். 1943ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்கள் தங்களைத் தூக்குவதற்கு ஒத்துழைக்காது என நிரூபிக்கப்பட்டதை மேற்கோள் காட்டியுள்ளார் வாசு ரெட்டி.

அம்மா, இங்கே வா...வா...

அம்மா, இங்கே வா...வா...

பிறந்து மூன்று மாதங்களே ஆன 18 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வும், இரண்டு முதல் நான்கு மாதங்களான 10 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்ஹ்டுக் குழந்தைகளுமே பாயில் படுக்க வைக்கப்ப்ட்டிருந்தன. அவர்களின் அம்மாவை அருகில் வர வைத்து சோதனை செய்யப் பட்டது.

அம்மா சொல்லைத் தட்டாத குழந்தைகள்...

அம்மா சொல்லைத் தட்டாத குழந்தைகள்...

தாய்மார்கள் முதலில் குழந்தைகளுடன் பேச வைக்கப்பட்டார்கள். பின்னர், குழந்தைகளைத் தூக்க வைக்கப்பட்டார்கள். இதில் இரண்டு மாதங்களான குழந்தைகள் தங்களது தாயின் வசதிக்கேற்ப உடலை வளைத்துக் கொடுத்து தூக்குவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனவாம்.

English summary
London: Babies as young as two months know when they are about to be picked up and change their body posture in preparation, a new study led by an Indian-origin scientist has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X