For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு என்ன தண்டனை? தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான 17 வயது சிறுவனுக்கு என்ன தண்டனை என்பது குறித்த தீர்ப்பு ஆகஸ்ட் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. அந்த மாணவி டிசம்பர் 26-ந் தேதி சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Delhi gang rape: Juvenile Justice Board likely to pronounce verdict today

இச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 கயவர்களில் 17வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் அடக்கம். அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் கடந்த 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இன்றைய விசாரணையின் முடிவிலும் தீர்ப்பு ஆகஸ்ட் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Juvenile Justice Board hearing the 16 December Delhi gangrape and murder of a 23-year-old medical student is likely to deliver its verdict today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X