For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூர்க்காலாந்து தனி மாநில போராட்டத்தின் பின்னணியில் சீனா: உளவுத்துறை திடுக் தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்ததின் பின்னணியில் சீனா இருப்பதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை சுற்றிய பகுதிகளை தனியே பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது.

அண்மையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து கூர்க்காலாந்து போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ஆனால் மாநில முதல்வர் மமதா பானர்ஜியோ இந்தப் போராட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்திருப்பதன் பின்னணியில் சீனாவின் தூண்டுதல் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுப்பதன் மூலம் தங்களுக்கான ஸ்லீப்பர் செல்களை அங்கு நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று சீனா கருதுவதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து டார்ஜிலிங் உள்ளிட்ட கூர்க்காலாந்து பகுதிகளில் சீனா உளவாளிகள், ஸ்லீப்பர் செல் என சந்தேகிப்போர் தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.

English summary
Intelligence agencies suspect that the agitation for Gorkhaland is gathering force due to support from external sources, possibly China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X