For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி மாவட்டத்தில் என்னால் வாழ முடியாது, கேரளா போகிறேன்- பாலபிரஜாபதி அடிகளார்

Google Oneindia Tamil News

I cannot live in Kumari dt, declares Balaprajapathi adigalar
தென்தாமரைகுளம்: என்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ முடியாது. எனவே கேரளத்துக்கு சென்று அமைதியாக பாதுகாப்புடன் வாழ விரும்புகிறேன் என்று திடீரென அறிவித்துள்ளார் சாமித்தோப்பு தலைமை பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது...

முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-1-2011 அன்று சாமிதோப்பு தலைமைபதிக்கு வந்தபோது பதியின் முன்கிணற்றின் சுற்று மதில் சுவரை அகற்றி ஓற்றை பனை மரத்தினை அகற்றி ராஜகோபுரத்திற்கு அடிக்கல் நாட்டிட ஏற்பாடு செய்தேன்.

இதை எதிர்த்து தடு்த்து நிறுத்தியவர் பாலஜனாதிபதி. ஆனால் இன்று திடீரென்று அதே இடத்தில் நீதிபதி ஜோதிமணியையும், அமைச்சர் பச்சைமாலையும் அழைத்து வந்து ராஜகோபுர அடிக்கல் நாட்டியுள்ளனர். இதற்கான அவசியம் என்ன...

ராஜாக்கமங்கலம் பனையூர் இந்து நாடார்கள் மட்டுமே வாழும் சிற்றூர். அவ்வூர் மக்களை அச்சுறுத்தி அகறறும் செயலாக தனியார் மீன்பிடி துறைமுகம் அமைக்க முயற்சி நடைபெறறு வருகிறது. மீனவர் ஒருவர் கூட இல்லாத ஊரில் மீன்பிடி துறைமுகம் தேவையா. இருக்கும் அரசு, தனியார் மீன்பிடி துறைமுகங்களே முழுமையாக பயன்படுத்தும் எண்ணிக்கையில் இந்த மாவட்டத்தில் மீனவர் இல்லை.

முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் அடிக்கல் நாட்டிய துறைமுக பணிகளை முதல்வர் ஜெயலலிதாவின் தனி விருப்ப திட்டமென்று சொல்லி அதிகாரிகள் ஏமாற்றி மணல் திட்டுகள் இல்லை, மரங்கள் இல்லை என்று பொய்யான சான்றுகளை சமர்பித்து அவசர கோலத்தில் பணி நடந்து வரும் போது பசுமை தீர்ப்பாயத்தில் தற்காலிக தடை உத்தரவு பெற்று பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணியை அழைத்து வந்துள்ளது அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதி கிடைக்குமா என அச்சமடைந்துள்ளனர். நான் ஊரில் இல்லாத போது அடிக்கல் நாட்டிய செய்தி எனக்கு அதிர்ச்சியினையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாராவது வழக்கு தொடு்த்தால் காவல்துறை கையில் எடுக்காது என்று மிரட்டி உருட்டும் இவர், எந்த நேரத்திலும் எங்களை மிரட்டும் இவர், எனது உரிமையை தனது உரிமையாக பிரகடனப்படுத்தி கொண்டு அமைச்சர், நீதியரசரை கொண்டு அடிக்கல் நாட்டிய செயல் மேலும் அச்சத்தை ஏற்படு்தியுள்ளது.

இதனால் என்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ முடியாது. எனவே கேரளத்துக்கு சென்று அமைதியாக பாதுகாப்புடன் வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அடிகளார்.

English summary
Religious leader Balaprajapathi adigalar has said that, he cannot live peaefully in Kumari dt anymore and has blamed govt officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X