For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு: லிஸ்டிலேயே இல்லாத பவானி சிங்கை நியமித்தது ஏன்?: கர்நாடகாவுக்கு நோட்டீஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

Supreme Court issues notice to Karnataka on J Jayalalithaa's plea
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலில் இல்லாத பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) நியமித்தது எப்படி என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து பவானிசிங் நியமனம், நீக்கம் தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யுமாறு கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பின்னணி

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இழுத்தடிப்புக்குப் பின்னர் இந்த வழக்க்கு தற்போது விறுவிறுவென இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

திமுக தலையீடு

குறிப்பாக கர்நாடக அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கு விறுவிறுவென முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நகர்ந்தது. இதனால் சந்தேகமடைந்த திமுக தரப்பு தம்மையும் வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. இதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டது. பின்னர் எந்த நோக்கத்துக்காக பெங்களூருக்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டதோ அதற்கு எதிராகவே அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் செயல்பாடு என்று இருக்கிறது திமுக சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

பவானிசிங் வாபஸ்

இதைத் தொடர்ந்து கர்நாடகா அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து பவானிசிங்கை வாபஸ் பெறுவதாகவும் கர்நாடகா அரசு அறிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் ஜெ. முறையீடு

பவானிசிங் வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ராவ், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பொறுத்தவரை நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களை கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் மாநில அரசு பரிந்துரை செய்தது என்றும், அந்த பெயர்களை விட்டு விட்டு புதிதாக பவானிசிங்கை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) நியமித்ததாகவும் தெரிவித்தார். மேலும் பவானி சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்ததால், உடனடியாக கர்நாடக அரசு அவரை திரும்பப் பெற்றதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு ஏழு மாதங்கள் கழித்துத்தான் கர்நாடக அரசுக்கு இது தெரியவந்ததா என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து பவானிசிங் நியமனம், நீக்கம் தொடர்பான ஆவணங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
Supreme Court issued notice to Karnataka government on a plea of Tamil Nadu Chief Minister J Jayalalithaa against the removal of Special Public Prosecutor in a disproportionate assets case against her and said no fresh appointment of public prosecutor be made in the case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X