தடுப்பூசி யாரெல்லாம் போடவில்லை.. வீடு வீடாக வரப்போகும் அதிகாரிகள்.. பெங்களூரில்!
பெங்களூர்: இதுவரை தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் காண ப்ருஹத் பெங்களூர் மகாநகர பாலிகே (பிபிஎம்பி) வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும் என்று நகர கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம், பெங்களூர். கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், மே மாதத்திலும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கூட கிடைக்காத நிலை இருந்தது.
கொரோனா அலை ஓய்ந்த பிறகு, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது மாநகராட்சி. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இப்போது ஏதோ பரவாயில்லை. ஆனால் இன்னும் பற்றாக்குறை நிலவுகிறது.

வீடு வீடாக சர்வே
இந்த நிலையில்தான், "நாங்கள் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்துவோம், இதன் மூலம் எந்த சொசைட்டி, அல்லது எந்த பகுதியில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடையாளம் காண இது உதவி செய்யும்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார் நகர கமிஷனர் கவுரவ் குப்தா .

மத்திய அரசு ஒதுக்கவில்லை
"தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இருப்பினும், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தடுப்பூசிகள் சப்ளை இல்லை. மாநில அரசு அதை மத்திய அரசிடமிருந்து பெறவில்லை, இதனால் மாநகராட்சிக்கு மாநில அரசு ஒதுக்கவில்லை. இருப்பதை வைத்து எப்படியோ நிர்வகித்து வருகிறோம், " என்றும் அவர் கூறினார்.

சிறப்பு முகாம்கள்
அவர் மேலும் கூறுகையில், "தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் உள்ள மாநகராட்சி சுகாதார மையங்களின் மூலமாக, முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்குகிறோம். 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு, இப்போது ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தடுப்பூசிகளை வழங்க சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம்.

முன்னுரிமை மக்கள்
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம். தற்போது, கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இதுபோன்ற திட்டம் வைத்துள்ளோம். இந்த சிறப்பு கேம்பைன்களால், சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற முடிந்தது. எனவே கல்லூரி மாணவர்களிடையே இப்போது தடுப்பூசிக்கான தேவை குறைந்து வருகிறது. " என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications