"இது என்னடா பெங்களூர்வாசிகளுக்கு வந்த சோதனை!" பார்க்கில் நாகினி டான்ஸுக்கு அனுமதி கேட்கும் நெட்டிசன்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகரில் வாக்கிங் செல்வது குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உடலை ஃபிட்டாக வைத்து இருக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். கொரோனா காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகப் பலராலும் உடற்பயிற்சி கூடச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது.
இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில், மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். ஜிம், பூங்கா போன்றவற்றில் கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டு வருகிறது.

பெங்களூர்
இப்படியொரு சூழலில் தான், பெங்களூரில் உள்ள ஒரு பூங்காவில் வைக்கப்பட்டுள்ள நோட்டீஸ் போர்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாகப் பூங்காக்களில் என்ன மாதிரியான நோட்டீஸ் இருக்கும்? செல்ல பிராணிகளை அழைத்து வராதீர்கள், பூக்களைப் பறிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள் போன்ற நோட்டீஸ் அறிவிப்புகளை பார்க்குகளில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், பெங்களூர் பார்க்கில் அப்படி நோட்டீஸ் இல்லை.

நோட்டீஸ் போர்ட்
பெங்களூரில் பார்க்கின் இந்த வித்தியாசமான அறிவிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது. இந்த ஃபோர்ட் முதலில் ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்டது. பூங்காவில் ஆன்டி-கிளாக் திசையில், அதாவது கடிகாரத்தின் திசைக்கு எதிர்புறம் நடக்கவோ ஜாக்கிங் செய்யவோ கூடாது என்று அதில் கூறப்பட்டு உள்ளது. பெங்களூரின் உள்கட்டமைப்பு வசதிகளை நிர்வகிக்கும் BBMP (Bruhat Bengaluru Mahanagara Palike) இந்த அறிவிப்பை நிர்வகித்து உள்ளது.

நாகினி டான்ஸ்
இந்த அறிவிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் நக்கலான பதிலை அளித்து வருகின்றனர். ஒருவர் பார்க்கில் நாகினி டான்ஸுக்கு அனுமதி உள்ளதா என நக்கலாகக் கேட்டு உள்ளார். மற்றொருவர், "நான் எதிர்த்திசையில் ஓடுவதைப் பார்த்தால் அவர்களும் அதே திசையில் வந்து தடுப்பார்களா அல்லது என்ன செய்வார்கள்" என நக்கலாகத் கேட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் சாப்போர்ட்
மற்றொரு நெட்டிசன் "மூன்வாக்கிற்கு அனுமதி இருக்கிறதா? என்றும் நக்கலாகக் கேட்டு உள்ளார். அதேநேரம் சிலர் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது பார்க்கில் அனைவரும் ஒரு திசையில் (கிளாக் வைஸ்) நடந்து கொண்டு இருக்கும் போது, சிலர் எதிர்த் திசையில் நடந்தால் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படும் என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர்.

பார்கிங்
அதேநேரம் பெங்களூரில் இதுபோன்ற தனித்துவமான நோட்டீஸ் போர்ட் இணையத்தில் வேகமாகப் பரவுவது இது முதல்முறை இல்லை. கொஞ்ச காலத்திற்கு முன்பு, பார்கிங் தொடர்பான ஃபோட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி இருந்தது. "இந்த இடத்தில் பார்கிங் செய்வது குறித்து யோசிக்கக் கூட வேண்டாம்.." என்றும் "5 நிமிடமோ அல்லது அரை மணி நேரமோ கண்டிப்பாக இங்கு பார்கிங் செய்யக் கூடாது" என்ற நோட்டீஸ் போர்ட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications