பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாதம் ரூ.55,000 ஊதியம்.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. வெளியான புதிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல இடங்களில் செயல்பட்டு வரும் பெல் (BEL or Bharat Electronics Limited) நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்/ BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

குறிப்பாக இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாட பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.

ஒருநாளுக்கு 3 முறை.. பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்க ‛வாட்டர் பெல்’ திட்டம்.. அசத்தும் கர்நாடகா ஒருநாளுக்கு 3 முறை.. பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்க ‛வாட்டர் பெல்’ திட்டம்.. அசத்தும் கர்நாடகா

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

பெல் நிறுவனத்தில் மொத்தம் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிரெய்னி என்ஜினீயர் -I பிரிவில் மொத்தம் 180 பணிகளும், ப்ராஜெக்ட் என்ஜினியர் I பிரிவில் 80 பணிகளும் நிரப்பப்பட உள்ளது. டிரெய்னி என்ஜினியர் பதவியில் மெக்கானிக்கல் பிரிவில் 35, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 112, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 25, சிவில் மற்றும் எலக்டரிக்கல் பிரிவில் தலா 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேநேரத்தில் ப்ராஜெக்ட் என்ஜினியர் பிரிவில் மெக்கானிக்கல் பிரிவில் 26, எலக்ட்ரானிக் பிரிவில் 38, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 5, சிவில் பிரிவில் 3, எலக்ட்ரிக்கல் பிரிவில் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது என்ஜினியரிங் கல்லூரியில் சம்பந்தப்பட்ட பிரிவில் முழுநேரமாக பிஇ, பிடெக் அல்லது பிஎஸ்சி பிரிவில் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியமாகும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

டிரெய்னி என்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயதானது 01.11.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.

 மாத ஊதியம் எவ்வளவு?

மாத ஊதியம் எவ்வளவு?

இது ஒப்பந்த பணி என்பதால் டிரெய்னி என்ஜினியர் பணிக்கு முதல் ஆண்டில் ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டில் ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டில் ரூ.40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.40,000, 2வது ஆண்டு ரூ.45,000, 3வது ஆண்டு ரூ.50,000, 4வது ஆண்டு ரூ.55,000 ஊதியமாக வழங்கப்படும்.

 தேர்வு முறை எப்படி?

தேர்வு முறை எப்படி?

விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிரெய்னி என்ஜினியர் பணி என்பது 2 ஆண்டு ஒப்பந்த பணி. தேவையெனில் கூடுதலாக ஒரு ஆண்டு ஒப்பந்தம் செய்யப்படும். ப்ராஜெக்ட் என்ஜினியர் பதவியை பொறுத்தமட்டில் 3 ஆண்டு ஒப்பந்த பணி வழங்கப்படும். தேவையெனில் 4வது ஆண்டு தொடரப்படும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் www.bel-india.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 14(14.12.2022) கடைசிநாளாகும். ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு ரூ.400ம், டிரெய்னி பணிக்கு
ரூ.150 விண்ணப்ப கட்டணமாக உள்ளது. இதனுடன் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணமும் உண்டு. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பணி எங்கு?

பணி எங்கு?

இவ்வாறு விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஜம்மு காஷ்மீர், லே, விசாகப்பட்டினம், மும்பை, போர்ட் பிளேயர், வடகிழக்கு மாநிலங்கள், கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்பட பிற இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணி தொடர்பான ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
BEL or Bharat Electronics Limited, which is operating in many places in India with its headquarters in Bangalore, has many positions to be filled with a monthly salary of Rs.30 thousand to Rs.55 thousand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X