நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க
பெங்களூர்: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஐபிஎல் இறுதி போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது. இரவை பகலாக்கும் வகையில் வானில் வண்ண வண்ண பட்டாசுகளை வெடிக்க வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது.இறுதி வரை ஆட்டமிழக்காமல் விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.
இதன்மூலம் ஆர்சிபி அணி கடந்த ஆண்டை தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி கொண்டாட்டத்தை நாடு முழுவதும் இருக்கும் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.
Ee Sala-nu Cup Namde
— Karnataka Portfolio (@karnatakaportf) May 31, 2026
Congratulations @RCBTweets
🔥 #bengaluru #bangalore #rcb pic.twitter.com/t6ckhfrqNw
பெங்களூரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். வண்ண வண்ண பட்டாசுகளை ரசிகர்கள் வெடிப்பதால் பெங்களூர் நகரின் வானம் முழுவதும் ஒளிர்ந்த நிலையில் உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் சாலைகளில் ஆர்சிபி அணியின் கொடிகளை கைகளில் ஏந்தி வாகனங்களி்ல பயணித்து வருகின்றனர்.
Rivalry is so GOATED that now, it's not just GT vs RCB
— 𝄟≛⃝suryꫝ⸙࿐☆༒꧂ (@SURYA2524) May 31, 2026
It's MI, CSK, KKR, RR, SRH, LSG, DC, PBKS, GT vs #RCB. 😂🔥
Party just Started #Bengaluru
Congratulations to @RCBTweets pic.twitter.com/OiVXtZrxWT
அதேபோல் பல சாலைகளில் இளைஞர்கள் தங்களின் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி ஆட்டம் ஆடி கொண்டாடி வருகின்றனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்கள் சாலையில் குவிந்து நடனமாடியும், ஆர்சிபி.. ஆர்சிபி என்று கோஷமிட்டு வெற்றியை கொண்டாடுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து ரசிகர்களை விலக்கி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்து வருகின்றனர். மொத்தத்தில் ஆர்சிபி அணியின் இந்த வெற்றி என்பது பெங்களூரைநகரில் தீபாவளி கொண்டாட்டத்தை போன்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications