ஒரே நொடியில் பயங்கரம்.. கர்நாடகாவில் சட்டென சரிந்த விமானம்... மோசமான விபத்து.. என்ன நடந்தது!
பெங்களூர்: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில், ரெட்பேர்ட் ஏவியேஷனுக்கு சொந்தமான தனியார் பயிற்சி விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானிகள் பயிற்சி பெற்று வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் விமானத்தில் இருந்த இருவரும் மோசமாகக் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே விமான விபத்து தொடர்பாக வெளியாகும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்தைக் காட்டிலும் விமானப் போக்குவரத்து என்பது பாதுகாப்பான ஒரு முறையாகவே இருக்கிறது. மிக மிக அரிதாகவே விமான விபத்துகள் அரங்கேறுகின்றன.

விமான விபத்து
இருப்பினும், விமான விபத்துகள் மிக மோசமான பேரழிவுகளை ஏற்படுத்துவதால் அவை தலைப்புச் செய்தியாகிறது. சமீபத்தில் கூட அப்படித் தான் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற விமானம் மகாராஷ்டிராவில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த அஜித் பவார் உட்பட அனைவருமே உயிரிழந்தனர். இதற்கிடையே மற்றொரு விமான விபத்து மீண்டும் நடந்துள்ளது.
என்ன நடந்தது!
கர்நாடகா மாநிலத்தில் ரெட்பேர்ட் ஏவியேஷனுக்குச் சொந்தமான தனியார் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. கலபுர்கியில் இருந்து பெலகாவிக்கு அந்தப் பயிற்சி விமானம் சென்று கொண்டு இருந்தது. இலகுரக விமானமான அது விஜயபுரா மாவட்டத்தில் மங்களூர் அருகே வந்தபோது திடீரென அது கட்டுப்பாட்டை இழந்தது. இயந்திரக் கோளாறு காரணமாக அங்குள்ள கிராமப் பகுதியில் உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
படுகாயம்
விபத்தின்போது விமானத்தில் கேப்டனும், பயிற்சி விமானியும் இருந்துள்ளனர். இந்த விபத்தில் இருவருமே படுகாயமடைந்தனர். விமானம் விபத்துக்குள்ளாவதைப் பார்த்தவுடன் அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து அவர்களுக்கு உதவியுள்ளனர். காயமடைந்த பைலட் மற்றும் பயிற்சி விமானி இருவரும் மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் விமானம் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதும் அதன் முன்பகுதி மிக மோசமாகச் சேதமடைந்து இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.. பாபலேஷ்வர் அருகே நடந்த இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
போலீஸ் தகவல்
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி, "இது ரெட்பேர்ட் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமாகும். கலபுர்கியில் இருந்து பெலகாவிக்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, திடீரென விபத்துக்குள்ளானது. விமானத்தில் கேப்டன், பயிற்சி விமானி என இருவர் இருந்துள்ளனர். இருவருக்கும் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் முதற்கட்டச் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications