மே.10ல் கர்நாடக தேர்தல்.. மாற்று திறனாளிகள், முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.. எப்படி?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள்
கர்நாடகா தேர்தல்: பொது தொகுதிகள்- 173; எஸ்சி 36; எஸ்டி 15 உள்ள என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகா சட்டசபை தேர்தல்- தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 58,282 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். கர்நாடகாவில் 1320 வாக்குச் சாவடிகளில் பெண்கள் மட்டுமே தேர்தல் அலுவலர்கள். கர்நாடகாவில் 100 வாக்கு சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே தேர்தல் அலுவலர்கள். கர்நாடகாவில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர் எண்ணிக்கை 9.17 லட்சம் அதிகம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்களிப்பு
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. முதல்முறையாக இந்த வசதியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. வீட்டில் பாதுகாப்பான அமைப்பு ஏற்படுத்திக்கொடுத்து மக்கள் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார் என்பது வெளியே தெரியாத மூடப்பட்ட அமைப்பில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். மக்கள்தான் வாக்களிக்கிறார் என்பதை உறுதி செய்தி எதிர் பக்கத்தில் கேமராவில் இது பதிவும் செய்யப்படும்.

கட்சிக்கு தகவல்
வீட்டில் சென்று வாக்களிக்கும் வசதியை ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளும் சமயத்தில், அதை பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கத்தை பின்பற்ற உள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, தேர்தல் ஆணையப் அதிகாரிகள் ஒன்றாக வந்து இந்த வாக்களிப்பை பெறுவார்கள். அவர்கள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று வாக்கு பெட்டியை கொடுப்பார்கள். அவர்களின் அடையாளத்தை உறுதி செய்துவிட்டு வாக்கை பெறுவார்கள்.

வாக்கு
வயதானவர்கள் என்றால் அவர்களிடம் வாக்காளர் அட்டையை வைத்து வயதை உறுதி செய்வார்கள். அதேபோல் மாற்றுதிறனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும். இதற்கான பார்ம் 12 டி என்பதில் கையெழுத்தும் போட வேண்டும். பின்னர் இந்த வாக்குகள் வாக்கு சேகரிப்பு மையத்திற்கு அனுப்பப்படும். பெரும்பாலும் வாக்கு பதிவு நடக்கும் 10ம் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்பாக இந்த தேர்தல் நடக்கும். வீடு வீடாக சென்று வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த இதற்காக வாகனம் ஒன்றும் களமிறக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications