ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், 800 கிலோ வைர நகை-தமிழகத்திடம் எப்போது ஒப்படைப்பு? நீடிக்கும் சஸ்பென்ஸ்!
பெங்களூர்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், 800 கிலோ வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதற்கான தடையை ஏப்ரல் 15-ந் தேதி வரை நீட்டித்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் சிறையில் 4 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வைர நகைகள், 11344 பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடகாவில் இந்த வழக்கு நடைபெற்றதால் கர்நாடகா அரசின் பாதுகாப்பில் இந்த நகைகள் இருந்து வந்தன. இவற்றை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
இதனிடையே ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் கர்நாடகா அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கின் விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி முகமது நவாஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா அரசு தரப்பில் ஜெயலலிதாவின் நகைகளுக்கு தீபா, தீபக் உரிமை கோருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதற்கான இடைக்கால தடையை ஏப்ரல் 15-ந் தேதி வரை நீட்டித்து வழக்கு விசாரணையை நீதிபதி முகமது நவாஸ் ஒத்தி வைத்தார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications