பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பகலில் எம்.என்.சி மேனேஜர்... இரவில் வழிப்பறி திருடன்: பெங்களூர் எம்.பி.ஏ பட்டதாரி கைது

Google Oneindia Tamil News

MNC manager by day and chain snatcher at night
பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார்.

பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறு தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரவில் செயின் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம் ரூ 25,000 சம்பளத்தில் பணி புரிந்து வரும் சாய்கட்டிற்கு சொகுசு வாழ்க்கை வாழும் ஆசை வந்துள்ளது. ஆனால், அதற்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லையாம். இந்நிலையில், கடந்தாண்டு நடந்த விழா ஒன்றில் சுனக் தத்தா என்ற 20வயது பொறியியல் மாணவனோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் கூட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட செயின் வழிப்பறிகளில் இரவு நேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் இருவருமே கொல்கத்தாவைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆனபோதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இத்தகைய திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

வழிப்பறி செய்த செயின்களை அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று பங்கிட்டு வந்துள்ளனர் இருவரும். தன் பங்குப் பணத்தில் தனது கல்விக்கடனை அடைக்க சுனக் திட்டமிட்டுருந்ததாக தெரிய வந்துள்ளது.

பில்லியனில் சென்று வழிப்பறி செய்வது இவர்களது வழக்கமாம். சமீபத்தில் இவர்களது வழிப்பறியில் சிக்கி தனது செயினை பறி கொடுத்த பெண் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் இவர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாய்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாய்கட் தங்களது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என மறுத்துள்ளது அந்நிறுவனம்.

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Until now, only miscreants and college dropouts were usually found indulging in chain snatching. So, the Bangalore police were left dumbstruck when a chain snatcher they caught last Sunday turned out to be a manager in a reputed MNC firm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X