பெங்களூர் ரோட்டில் ராட்சத பள்ளம்.. என்னங்க இவ்வளவு ஆழமாக இருக்கு.. என்ன நடந்தது?
பெங்களூர்: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் பெங்களூர் அத்திபள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. பார்க்க பள்ளத்தாக்கு போல் ஆழமாக ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தால் பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ஓசூர் ரோட்டில் ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. நாள்தோறும் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இந்த சாலை வழியாக லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெங்களூர் அத்திப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் திடீரென்று சாலையில் விழுந்த பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பள்ளம் ஆழமாக உள்ளது. இதனால் பாதுகாப்புக்காக பள்ளத்தை சுற்றி தடுப்புகள் வைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பள்ளம் விழுந்த இடத்தில் புதிதாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சாலை திடீரென்று உள்வாங்கி உள்ளது. இதனால் தான் சாலை பூமிக்குள் சரிந்துள்ளது.
Nitin Gadkari Magic 🪄 ✨
— Dr Ranjan (@Doc_RGM) February 4, 2026
NH-44 Caves In and COLLAPSES near Attibele on Bengaluru-Hosur Route.
Keep paying TAX & TOLL to the Ethanol King of India @nitin_gadkari pic.twitter.com/UToRImc7Hl
இதுபற்றி அத்திப்பள்ளி காவல்துறை கூறுகையில் ‛‛இரவில் நடந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக எந்த விபத்துகளும் ஏற்படவில்லை. பள்ளம் ஏற்பட்ட சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக தடுப்புகள் வைத்துள்ளோம்'' என்றனர்.
தற்போது இந்த சாலையை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தற்போது அந்த பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த அதன் அருகே சர்வீஸ் சாலை திறக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications