இன்னிக்கு வர்றேனு சொன்னீங்க வரவேயில்லை! நித்யானந்தாவை வலை போட்டு தேடும் சிஷ்யக் கோடிகள்! என்ன ஆச்சு?
சென்னை : பண மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களில் சிக்கித் தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா குரு பூர்ணிமா நாளான இன்று பக்தர்களுக்கு தோன்றி ஆசி வழங்குவார் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை அவர் வரவில்லை.. அதே நேரத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8:30 மணிக்கு நித்தியானந்தா பக்தர்களுக்கு நேரலையில் தோன்றி ஆசி வழங்குவார் என நித்தியானந்தாவின் கைலாசா ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்னுமே புரியலே உலகத்திலே என்ற ரீதியில் தான் இருக்கிறது சாமியார் நித்யானந்தா மற்றும் அவரது கைலாசா குறித்த தகவல். நித்யானந்தாவும், கைலாசாவும் இருக்குதா இல்லையா , நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அவரது பக்தர்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

சாமியார் நித்யானந்தா
இதுகுறித்து நித்யானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தோடு வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

அவதார் இஸ் பேக்
இந்நிலையில் குருபூர்ணிமா நாளான இன்று நேரலையில் சாமியார் நித்தியானந்தா பேசுவார் என அவரது சிஷ்யைகள் பதிவிட்டிருந்தனர். விரைவில் திரும்ப வருவேன் என நித்தியானந்தா கூறி வந்தாலும் எப்போது திரும்புவார் என்பது கூறப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த இந்த அறிவிப்பு நித்தியானந்த பக்தர்களை இன்பக் கடலில் ஆழ்த்தியது.

நித்தியானந்தா நேரலை
ஆனால் இதுவரை நித்தியானந்தா நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு ஆசி வழங்காத நிலையில் சமாதி போல இதுவும் நித்தியானந்தாவின் வழக்கமான உல்டாவா என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. இந்நிலையில் தான் அறிவித்தது போல நிச்சயம் நித்யானந்தா தோன்றுவார் என்கின்றனர் அவரது பக்தர்கள். அதாவது இன்று இரவு 8:30 மணிக்கு நித்தியானந்தா நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு ஆசிரை வழங்குவார் என கைலாவின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆசி உரை
அந்த உரையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிலவி வந்த தன் குறித்த அவதூறுகள்? சமாதி நிலையில் தான் பெற்ற அருள் மற்றும் சக்திகள், தனக்கு என்ன நடந்தது? கைலாசாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவாக விளக்குவார் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து உலகமெங்கும் இருக்கும் நித்தியானந்தாவின் சிஷ்யகோடிகள் நித்தியானந்தா எப்போது தோன்றுவார் என இணைய உலகினை ஆழ்ந்து உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications