பெங்களூரிலிருந்து மைசூருக்கு.. காரில் இனி ஜஸ்ட் 75 நிமிஷம்தான்! ஆனால்.. டோல்கேட் ரேட் என்ன தெரியுமா?
பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடார் பணி வரும் அக்டோபர் மாதம் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் நிலையில் பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். அதேநேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பவர்கள் 2 இடங்களில் டோல் கட்டணமாக மொத்தம் 200 முதல் 250 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் இருந்து மைசூருக்கு நான்கு வழிச்சாலை உள்ளது. இங்கு அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழித்தடமாக எக்ஸ்பிரஸ் காரிடார் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதில் 6 வழித்தடங்கள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கும், மீதமுள்ள 4 வழித்தடங்கள் சர்வீஸ் ரோடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

ரூ.8,350 கோடி செலவில்
இந்த திட்டத்துக்கு 2014ல் ரூ.4,100 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு இரட்டிப்பானது. அதன்படி ரூ.8350 கோடி செலவில் பெங்களூர்-மைசூர் 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடார் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முழுவதுமாக 2022 அக்டோபருக்கு முன்பு முடிவடைய உள்ளது.

அக்டோபரில் முழு பயன்பாடு
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே நிடகட்டா வரையிலான சாலை ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும். நிடகட்டாவில் இருந்து மைசூர் வரையிலான நெடுஞ்சாலை அக்டோபரில் திறக்கப்படும். இதன்மூலம் 140 கிலோமீட்டர் தொலைவிலான பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை அக்டோபரில் முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

2 சுங்கச்சாவடிகள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிக்காட்டுதல் படி ஒவ்வொரு 60 கிலோமீட்டருக்கு சுங்கச்சாவடி வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணங்கள் மாறுபாடு அடைகின்றன. நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், பாதைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணங்கள் வேறுபாடு அடைகின்றன.
இந்நிலையில் தான் பெங்களூர்-மைசூர் இடையேயான எக்ஸ்பிரஸ் ரோட்டில் பெங்களூர் கும்பலகோடு மற்றும் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா அருகே சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன. இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 9 பெரிய பாலங்கள், 44 சிறிய பாலங்கள், 4 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன. இதனடிப்படையில் சுங்கக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

ரூ.200 முதல் ரூ.250
இதுபற்றி மைசூர்-குடகு எம்பி பிரதாப் சிம்ஹா கூறுகையில், ‛‛இந்த நெடுஞ்சாலையால் பெங்களூர்-மைசூர் இடையேயான பயணத்தை 75 நிமிடங்களில் மேற்கொள்ளலாம். இதன்மூலம் நேரம் மிச்சமாவதோடு மைசூரில் தொழில்துறை வளர்ச்சிக்கும் பயனளிக்கும். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் ரூ.200 முதல் ரூ.250 வரை இருக்கும். இருப்பினும் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகே உண்மையான சுங்க கட்டணம் என்ன என்பது தெரியும்'' என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications