செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. மேலும், தங்கப் பத்திரத்திற்கு மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு தரப்பட்டு இருந்த நிலையில், அந்த விலக்கு நீக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனந்த் சீனிவாசன்
இது மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே இருந்தது. இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "சரியாக கெவின் வார்ஷ் நியமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சீனா அதிகளவில் தங்கத்தை விற்க ஆரம்பித்தது. அங்கு யார் தங்கத்தை விற்றார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சீனாவில் இருந்து ஹெவி செல்லிங் பிரஷர் வந்தது.. இதனால் அப்போது தங்கம் விலை சரிந்தது. இதனால் வெள்ளி விலையும் கூட பயங்கரமாகச் சரிந்தது. இரண்டுமே குறுகிய காலத்தில் பெரியளவில் குறைந்தது.
தங்கம் மீண்டும் உயருமா?
கெவின் வார்ஷ் வந்த பிறகு, அவர் டாலர் மதிப்பை ஏற்றுவார் என சொல்லி இன்னும் தங்கம் விலை மேலும் குறைந்தது. தங்கம் லேசாக சரிவதற்கு உள்ளேயே வெள்ளி விலை பயங்கரமாகக் குறைந்துவிட்டது. தங்கம் விலை இங்கிருந்து ஏறுமா என கேட்டால் நிச்சயம் ஏறும். ஆனால், அதனால் கொஞ்சம் செட்டில் டவுன் ஆகி ஏறும். ஒரு 3 மாதம் மூச்சு பிடித்து நின்றுவிட்டு, பிறகு உயரும்.
தங்க பத்திரம்
அடுத்து பட்ஜெட்டில் முக்கியமானது. பட்ஜெட் உரையில் இதை வாசிப்பதைத் தவிர்த்துவிட்டு, சமர்ப்பித்த பட்ஜெட் ஆவணத்தில் மட்டும் சத்தமில்லாமல் சேர்ந்து இருந்தனர். 12 வரிகளைச் சேர்த்திருந்தனர். இந்த 12 வரிகளை வைத்துத் தான் இந்தியாவின் மிடில் கிளாஸ் கனவில் அப்படியே தண்ணீரைக் கொட்டினார்கள்.
தங்க பத்திரம் வேண்டாம்.. வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் எனப் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல அடி கொடுத்த நிலையில், இப்போது பெரிய அடி விழுந்து இருக்கிறது.. முதலில் இந்தத் தங்கப் பத்திரத்தை வெளியிடும்போது என்ன சொன்னார்கள் என அனைவருக்கும் நினைவு இருக்கும். இந்தப் பத்திரத்தை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் இன்டர்சேஞ் பண்ணிக்கலாம். மூலதன ஆதாய வரியே இல்லை என்றார்கள்.
புது வரி
ஆனால், இப்போது மக்கள் ரூ.10,000 லாபம் பார்த்தவுடன் புதிய ரூல்ஸ் போடுகிறார்கள். ஆரம்பத்திலேயே நீங்கள் வாங்கி 8 வருடம் வைத்திருந்தால் மட்டுமே கேப்பிடல் கெயின்ஸ் கிடையாது. நடுவில் விற்றால் வரும் லாபத்தில் எனக்கும் ஒரு பங்கை வரியாகக் கொடுக்க வேண்டும். இது முதல் ரூல்ஸ். அதாவது நீங்கள் விற்கும்போது உங்களுக்கு மூலதன ஆதாய வரி வரும். அதேபோல உங்களிடம் இருந்து நண்பர் வாங்கும்போது அவருக்கும் கேப்பிடல் கெயின்ஸ் உண்டு. அதாவது நானும் கேப்பிடல் கெயின்ஸ் கட்ட வேண்டும். என்னிடம் இருந்து வாங்கியவரும் கேப்பிடல் கெயின்ஸ் கட்ட வேண்டும்.
யார் முதலில் வாங்கிவிட்டு, கடைசி வரை யார் விற்காமல் இருக்கிறார்களோ. அவர்களுக்கு மட்டுமே வரி இல்லை. மற்ற அனைவருக்கும் வரி உண்டு. இந்தப் பத்திரத்திற்கு ஏதோ 2% வட்டி கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அதையும் வட்டி வருமானத்துடன் சேர்த்து அதற்கும் வட்டி கட்ட வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை நீங்க 30% வரி விகிதத்தில் இருந்தால் அந்த வட்டியைக் கட்டியே ஆக வேண்டும். இந்த வரி சலுகையை ஒரே நாளில் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.
செல்லாமல் போய்விடும்
தங்கப் பத்திரத்தையும் டிமானிடைசேன் மாதிரி பண்ண வாய்ப்பு இருக்கு என முன்பே நான் சொன்னேன். இது அதற்கான முதல் படி போலவே தோன்றுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30,000 போய்விட்டது என்றால் அவ்வளவு எல்லாம் தர முடியாது.. நாங்களாக ஒரு தொகையைச் சொல்வோம். வேண்டும் என்றால் அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். வரியும் கட்டிவிடுங்கள் எனச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தங்கப் பத்திர விவகாரத்தில் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டு கதை போலவே ஆகிறது" என்றார்.
-
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
காசு பணம் துட்டு மணி மணி.." இதை மட்டும் பண்ணுங்க.. ரொம்பவே ஈஸியாக லட்சங்களில் பணத்தை சேமிக்கலாம்! -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications