For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் - பணத்தை பத்திரப்படுத்துங்க மக்களே

வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கைவிட வலியுறுத்தி ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சம்மேளம் ஆகிய அமைப

Google Oneindia Tamil News

டெல்லி: மூன்று வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இரண்டு நாட்களுக்கு வங்கி பணிகள், ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பணத்தை எடுத்து வைத்துக்கொள்வத நள்ளது.

வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கைவிட வலியுறுத்துவதுடன் 12 அம்ச கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் சுமார் 11 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

 Bankers 2 Day Strike Likely to Hit Services

பாங்க் ஆப் பரோடா வங்கியும் ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக மும்பை பங்குச்சந்தைக்குத் தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐடிபிஐ, பேங்க் ஆஃப் பரோடா, அலாகாபாத் வங்கி ஆகிய வங்கிகள், மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. அதில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் பெடரேஷன் ஆகியவை வரும் 8,9ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், வங்கிச்சேவை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 21, 26ஆம் தேதி இரு நாட்களில் 9 வங்கி சங்கங்கள், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், கோடிக்கணக்கிலான வங்கிப்பரிவரித்தனை பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎஃப், எஸ்இடபிள்யுஏ என மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால், அவசர வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய உள்ளவர்கள் இன்று மாலைக்குள் ஏடிஎம்மில் பணம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

English summary
The All India Bank Employees Association and Bank Employees Federation of India has informed the Indian Banks' Association of the two-day nationwide strike on January 8and9,2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X