For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.68.23 ஆக சரிவடைந்துள்ளது.

டாலர் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. டாலருக்கான தேவை அதிகரித்திருப்பதும், ரூபாய்க்கான தேவை குறைவதாலும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து டாலரை வாங்கிக் கொண்டிருக்கின்றன.

Indian Rupee lose against US dollar

இந்நிலையில் இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.68.19-ஆக இருந்தது. இருப்பினும் சற்று நேரத்தில் கொஞ்சம் மீண்ட ரூபாயின் மதிப்பு காலை 10.30 மணியளவில் 6 காசுகள் சரிந்து ரூ.68.10-ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக 3-வது நாளாக வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்த ரூபாயின் மதிப்பு தற்போது ரூ.68.23-ஆக இருக்கிறது. முன்னதாக நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.05 ஆக இருந்தது. இது கடந்த 29 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவாகும்.

English summary
The rupee continued to slide against the American currency for the 3rd day, slipping by another 18 paise to close at a fresh 29-month low of 68.23 on today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X