For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கப்பல் கட்டுமான தளம்: துறைமுக பங்குகளை விற்பனை செய்ய எல் அண்ட் டி பேச்சுவார்த்தை

By Mathi
Google Oneindia Tamil News

L&T in talks with investors to sell stake in Tamil Nadu terminal, seeks Rs 2,500 crore for its 97% stake
மும்பை: தமிழகத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டுமான தளம் மற்றும் துறைமுகத்தில் தமக்குள்ள பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் அண்ட் டி மற்றும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ரூ.4 ஆயிரம் முதலீட்டில் எல் அண்ட் டி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய இத்தளத்தில் சரக்கு கப்பல்கள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவினை பெருமளவில் கொண்டு செல்லும் சிறப்பு வடிவினைக்கொண்ட கப்பல்கள், கடலில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு கட்டுமானங்கள் வடிவமைத்தல் மற்றும் கப்பல் கட்டுவதற்கான கனரக இயந்திரங்கள் வடிவமைத்தல் ஆகிய வசதிகள் உள்ளன.

இத்துறைமுகத்தில் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு 97% பங்குகளும் 3% பங்குகள் தமிழக அரசுக்கும் உள்ளன. கடந்த ஆண்டு இந்த துறைமுகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இருப்பினும் இத்துறை வர்த்தகம் மெதுவாக இருப்பதால் எல் அண்ட் டி நிறுவனம் தமது பங்குகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஜப்பான் துறைமுக நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

English summary
India's biggest construction and engineering group Larsen & Toubro is in talks with potential investors for a stake sale in its container terminal in Tamil Nadu, a move prompted by slow off-take of the port business, two people familiar with the matter said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X