For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.10 லட்சம் வரையிலான வீட்டு கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ ரேட் விகிதத்தை இரு தினங்களுக்கு முன் 0.25 சதவீதம் குறைத்தது. இந்த வட்டிக் குறைப்பு காரணமாக வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக் கடன், வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு ஏற்படும்.

RBI relaxes loan norms for low-cost housing

இந்நிலையில் பொது மக்களுக்கு மேலும் ஒரு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை மூலம் ரூ.10 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறும் போது அதற்கான முத்திரைக் கட்டணம் (Stamp duty) மற்றும் பதிவு கட்டணம் (registration), டாக்குமண்டேஷன் கட்டணம் ஆகியவற்றை (வீடு வாங்கும்போது வீட்டின் விலையில் இந்தக் கட்டணங்களே சுமார் 15 சதவீதம் வரை வந்துவிடும்) வீட்டின் விலையுடன் சேர்த்துக் கொள்ள வங்கிகளை, ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

தற்போது இந்தக் கட்டணங்கள் வீட்டுக்கான கடனில் சேர்க்கப்படுவது இல்லை. இதை வீடு வாங்குவோர் தான் தனியே திரட்ட வேண்டும். இது வீடு வாங்குவோர்க்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.

இப்போதைய இந்த அறிவிப்பு குறைந்த விலையிலான வீடு வாங்குவோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

உதவும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

English summary
In a breather for those buying property worth less than Rs 10 lakh, banks have been allowed to add stamp duty, registration and other documentation charges to the cost of the house for calculating the loan-to-value (LTV) ratio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X