For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் முடிவுகள்... பங்குச் சந்தையில் வரலாறு காணாத உயர்வு.. சென்செக்ஸ் 25000ஐத் தாண்டியது!!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்ததுமே இந்தியப் பங்குச் சந்தையில் கிடு கிடு உயர்வு ஏற்பட்டுள்ளது.

பாஜக வெற்றி மற்றும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதியானதுமே இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவான 25000 புள்ளிகளை காலை பத்து மணிக்கே தொட்டுவிட்டது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் நல்ல உயர்வு காணப்பட்டது.

Sesex crosses record high of 25k

சென்செக்ஸில் இன்று 1448 புள்ளிகள் உயர்ந்து 25353 புள்ளிகளைத் தொட்டது. 25000 புள்ளிகளை சென்செக்ஸ் தாண்டியிருப்பது இதுவே முதல் முறை.

நிப்டி 377 புள்ளிகள் உயர்ந்து 7500 ஐத் தொட்டது. இதுவும் வரலாறு காணாத உயர்வுதான்.

பொதுத் துறை நிறுவனப் பங்குகள், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் நல்ல உயர்வு காணப்பட்டது.

பங்குச் சந்தையில் இந்த அசாதாரண ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தால், அதைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

English summary
Today, Sensex which opened with a massive gap-up, surged as much as 1448 pts in trade to touch its fresh lifetime high of 25353.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X