ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு.. பார்க்குறியா? டேல் ஊழியர்களிடம் ஆர்ம்ஸ் காட்டிய ‘தி கிரேட் காளி’.!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர் : பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி சுங்கச்சாவடியில் பணியாளரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் என்ன நடந்தது என கிரேட் காளி விளக்கமளித்துள்ளார்.

உலகளவில் புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ (WWE) மல்யுத்தப் போட்டியின் சாம்பியனான தாலிப் சிங் ராணா அகா என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் தி கிரேட் காளி என்றால் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக 90'ஸ் கிட்ஸ் மத்தியில் அவர் மிகவும் பிரபலம்.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு என்பது போல் ஒரே அடியில் அண்டர்டேக்கரையே வீழ்த்தி சாம்பியன் ஆனவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் காளி போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய நிலையில் WWE அந்தப் பணியை ராஜினாமா செய்து WWE போட்டிகளில் பங்கேற்றார்.

தி கிரேட் காளி

தி கிரேட் காளி

WWE போட்டியில் தி கிரேட் காளி பங்கேற்றபின் உலகளவில் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் மிக விரைவாக காளி பிரபலமடைந்தார். 8 அடி உயரம் மாமிச மலை போன்ற ஒருவர், என பிரம்மாண்டமாக தோன்றும் இவர், ஜான் சீனா, ராஜ், ரேண்டி ஆர்டன் உள்ளிட்ட பலரையும் துவம்சம் செய்துள்ளதோடு, வேல்ட் ஹெவி வெய்ட் சாம்பியன் உள்ளிட்ட பட்டங்களையும் தி கிரேட் காளி வென்றார். அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் தி கிரேட் காளி நடித்துளளார்.

தாக்கும் வீடியோ

தாக்கும் வீடியோ

இந்நிலையில் தி கிரேட் காளி சுங்கச்சாவடியில் பணியாளரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவானது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வேகமாக பரவி வருகிறது. புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரரான காளியிடம் அடையாள அட்டை கேட்டபோது தன்னை அறைந்ததாக ஒரு சுங்கச்சாவடி ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார்.

டோல்கேட் ஊழியர்கள்

டோல்கேட் ஊழியர்கள்

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று லூதியானா போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் கிரேட் காளியின் அவரது வாகனத்தைச் சுற்றி வளைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், காரிலிருந்து இறங்கிய அவர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் பதிவாகியுள்ளது.

காளி விளக்கம்

காளி விளக்கம்

ஊழியரை அவர் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து கூறியுள்ள காளி, சம்பவம் நடந்தபோது தான் ஜலந்தரிலிருந்து கர்னாலுக்கு பயணம் செய்ததாகவும், அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் தன்னுடன் படம் எடுக்க விரும்புவதாகவும் ஆனால் அவர் மறுத்ததாகவும் கூறியுள்ளார். தான் மறுத்தவுடன் லாடோவால் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தன்னை சுற்றி வளைத்து தவறாக நடந்துகொண்டதாகவும் காளி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்த காளி பிரச்சாரம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+