எனக்கு எல்லோருக்கும் ’ஜிலேபி’ கொடுத்துதாங்க பழக்கம்! 120 பெண்கள்..எல்லாம் அந்த வீடியோ! சிக்கிய பாபா!
சண்டிகர் : ஹரியானா மாநிலத்தில் தனது ஆசிரமத்துக்கு வந்த பெண்களுக்கு ஜிலேபியில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை சுயநினைவு இழக்க செய்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜிலேபி பாபா என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 120 பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தல் பாலியல் வன்கொடுமை பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதேபோல் அரியானா மாநிலத்திலும் பல மடங்குகள் உள்ளன.
அங்கு மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட பல்வேறு மடங்களின் ஆசிரமங்கள் உள்ளன. இந்த நிலையில் தான் நித்தியானந்தா போல அங்கும் ஒரு சாமியார் இருக்கிறார். நித்யானந்தா போலவே அங்கே இருக்கும் மற்றொரு சாமியார் ஒருவர் பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி உள்ளார்.

ஜிலேபி பாபா
மேலும் நித்தியானந்தா போலவே வீடியோ மூலம் தான் இந்த சாமியாருக்கும் வினை வந்திருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 120 பெண்களிடம் அந்த சாமியார் அத்துமீறியதும் அது தொடர்பாக நடந்த வழக்கில் தற்போது அவர் குற்றவாளி என ஹரியானா மாநில நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அரியானா மாநிலத்தில் தோஹானா மாவட்டத்தில் பாபா பலகீனாத் கோவில் இருக்கிறது இந்த கோவிலில் தலைமை சாமியாராக ஜிலேபி பாபா என அழைக்கப்படும் அமர்புரி என்பவர் இருந்திருக்கிறார்.

ஜிலேபி பாபா
நம்ம ஊர் கோவில்களில் வழங்கும் பிரசாதம் போல அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜிலேபி பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம் மேலும் இந்த சாமியார் சாமியாராக மாறுவதற்கு முன்பாக அப்பகுதியில் ஜிலேபி விட்டு வந்ததாகவும் அதன் பிறகு சாமியாராக மாறி ஆசி வழங்கிய அவரை ஜிலேபி பாபா என்று மக்கள் அழைக்க தொடங்கி இருக்கிறார்கள் ஜிலேபி விற்றவர் பாலியல் குற்றவாளியாக மாறியது எப்படி? என்பதை தான் தற்போது பார்க்க போகிறீர்கள்.

ஆபாச வீடியோ
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிலேபி பாபா தனது ஆசிரமத்திற்கு வந்த பெண் ஒருவருடன் முறையற்ற உறவு கொண்ட வீடியோவானது திடீரென சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் முளைத்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் இருந்தது. இதனையடுத்து அந்த சாமியார் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் தான் போலீசாரை மறைக்க வைக்கும் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கிடைத்தது.

பாலியல் வன்கொடுமை
குறிப்பாக அவரது அறையில் இருந்து போதை மாத்திரைகள், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆபாச வீடியோக்கள் மற்றும் போதை மருந்து கலந்த பூஜை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் தனது ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பேய் பிடித்து இருப்பதாக கூறி பயம் காட்டும் இவர் அவர்களிடம் சூனிய பூஜை செய்ய வேண்டும் என பூஜைகளில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார். பூஜையின் போது தேங்காயில் ரத்தம் வர வைப்பது, தண்ணீரில் சூடம் எரிய வைப்பது என பல வித்தைகளை காட்டி அவர்களை பயமுறுத்தியுள்ளார். பின்னர் ஜிலேபியில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை சுயநினைவு இழக்க செய்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

குற்றவாளி
அது மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து அடிக்கடி அந்த பெண்களிடம் பணம் பறித்து வந்ததோடு வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என கூறி அவர்களை தனது ஆசிரமத்திற்கு அடிக்கடி வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்த நிலையில் தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஜிலேபி பாபாவின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை குற்றவாளி என ஹரியானா மாநில நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications