சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. முதல்வர் சரண்ஜித் , சித்து களமிறங்கும் தொகுதிகள் இவைதான்!

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 14 -ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் பிரச்சினையை கிளப்பும் நவ்ஜோத் சிங் சித்து? பஞ்சாப் முதல்வர் பதவி குறித்து சர்ச்சை கருத்துமீண்டும் பிரச்சினையை கிளப்பும் நவ்ஜோத் சிங் சித்து? பஞ்சாப் முதல்வர் பதவி குறித்து சர்ச்சை கருத்து

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி நாள் ஜனவரி 28 ஆகும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 31 ஆகும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி ஆகும். ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரசில் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

ஒருபக்கம் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலிதளமும் களத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சியும் நிற்கிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

முதல்வர் போட்டியிடும் தொகுதி

முதல்வர் போட்டியிடும் தொகுதி

முதற்கட்டமாக 86 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்தும், காங்கிரசில் இருந்தும் வெளியேற முக்கிய காரணமாக கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சோனு சூட்டின் சகோதரிக்கு சீட்

நடிகர் சோனு சூட்டின் சகோதரிக்கு சீட்

துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தாவாவுக்கு தேரா பாபா நானக் சீட் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்றொரு துணை முதல்வரான ஓம் பிரகாஷ் சோனி மத்திய அமிர்தசரஸில் போட்டியிடுகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் இணைந்த நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகாவுக்கு மோகா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. சோனு சூட்டின் சகோதரி மாளவிகாவை "கேம் சேஞ்சர்" என்று சித்து புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Congress today released the preliminary list of candidates for the Punjab Assembly elections. Punjab Chief Minister and senior Congress leader Saranjit Singh is contesting from Sunny Samkaur Sahib constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X