செம்ம.. 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. விரைவில்.. திமுக அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்..!
கோயில்களில் 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனராம்
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே இந்து சமய அறநிலையத்துறை மிகுந்த வீர்யத்துடன் செயல்பட்டு வருகிறது.. புது புது அறிவிப்புகள், மக்களுக்கு நன்மை பயக்ககூடிய திட்டங்களை வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
அவ்வளவாக செயல்பாட்டில் இல்லாத துறையாக கருதப்பட்ட, இந்து சமய அறநிலையத்துறையை, தமிழக மக்களே வியந்து பார்க்கும் அளவுக்கு அதிரடிகளை காட்டி வருகிறார் அமைச்சர் சேகர்பாபு..

நியமனம்
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது அப்போதே மக்களிடம் வரவேற்பை பெற்றது.. இந்நிலையில் அது தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர்.

திருவண்ணாமலை
அதில், முதுநிலை கோயில்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட 47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோயில் வாரியாக எத்தனை பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்புக்கு தேவை என கணக்கெடுக்கும் பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

கோயில்கள்
முதுநிலை அல்லாத திருக்கோயில்களான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், பண்பொழில் திருமலைக்குமார சுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், கடலூர் மாவட்டம், மணவாளநல்லூர், கொளஞ்சியப்பர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில் உட்பட 489 கோயில்களுக்கு பாதுகாப்பு பணியாளர்களும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

நியமனம்
அதற்கான கணக்கெடுப்பு பணிகள் கோயில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 36,000 கோயில்கள் இயங்கி வரும் நியில், முக்கிய திருக்கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும், பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோயில் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications