பேசிட்டே ஆற்றில் விழுந்த 18 வயசு சுமித்ரா.. செல்போனில் காதலன்! பாலத்தில் தவித்த தோழி! இப்படியுமா?
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன. முக்கியமாக, இளம் தலைமுறையினரின் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.. இந்த இளம் மரணங்களுக்கு பிரதான காரணமாக இருப்பது, அவர்களது புரிதல் குறைபாடுகள்தான் என்று மனநல மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.. இதோ இன்று மதியம் ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முழு வீச்சில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய பகுதிகளில் பலத்த மழை பெய்தபடியே உள்ளது..

கொட்டும் பேய்மழை
கடந்த 29ம் தேதியும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.. வடகிழக்கு மாவட்டங்களில் பலத்த மழைக்கான எச்சரிக்கையும் முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்தது.. அதேபோல, 30 மற்றும் 31ம் தேதி வரை இந்த கனமழை நீடிக்கும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருந்தது.வடமேற்குப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியே இந்த மழைக்கான காரணம் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.. தொடரும் கனமழைஇதனால், ஜார்க்கண்ட் முழுவதுமே, சமீப நாட்களாக பருவமழை தீவிரமாக காணப்பட்டது.. இதில், மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஜிங்க்பானியில் அதிகபட்சமாக 74.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.இதனிடையே, 4 நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில், மழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து, தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுமியும் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது.. கார்காய் மற்றும் சுபர்ன்ரேகா நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்..
சுமித்ரா காதலன்
இப்படி சமீப நாட்களாகவே மழையின் பிடியில் ஜார்க்கண்ட் சிக்கி வரும்நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஜாம்ஷெட்பூரை சேர்ந்த 187 வயது பெண் சுமித்ரா பிரமானிக்.. இவர் அந்த பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்.
இன்று மதியம், சுமித்ராவும், அவரது தோழியும் கர்காய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சுமித்ரா தன்னுடைய காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்..
மிரண்டுபோன தோழி
திடீரென காதலர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது.. இதனால் ஒருவரையொருவர் சரமாரியாக போனிலேயே திட்டிக் கொண்டார்கள்.. ஒருகட்டத்தில் ஆவேசமும் ஆத்திரமும் அடைந்த சுமித்ரா, காதலனுடன் வாக்குவாதம் செய்து கொண்டே, திடீரென பாலத்தின் தடுப்பு மீது ஏறி நின்று, ஆற்றுக்குள் குதித்துவிட்டார்.இதைப்பார்த்து பதறிப்போன தோழி அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார்.. யாராவது சுமித்ராவை காப்பாற்றுங்களேன் என்று கதறி அழுதார்...
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் மீட்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.. ஆற்றில் இறங்கி சுமித்ராவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...
ஆனால், இதுவரை சுமித்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை.. பலத்த மழையும் அங்கு பெய்து வருவதால், தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படை வீரர்கள் சொல்கிறார்கள்.
-
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications