1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்னது இதுதான்
பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதல்வரிடம் இன்று வழங்கியுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமே தேர்வுகள் எழுதினர்.

2020-2021ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா முதல் அலை சற்றே குறைந்த உடன் கடந்த ஜனவரி மாதம் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வீரியமடையவே அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டன. 1 முதல் 8 வரை படித்த மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளுக்கு செல்லாமல் உள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறைந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின. கடந்த 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 83 மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளிகளை மையமாகக் கொண்டு கொரோனா பரவல் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க வலியுறுத்தி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது.
நேற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்துகொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவினை அறிக்கையாக இன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வி அதிகாரிகள் தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். அந்த முடிவுகளை முதல்வரிடம் அறிக்கையாக கொடுத்துள்ளோம் என்றார். வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 1500 என்ற அளவிலேயே இருக்கும் நிலையில் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக் கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த வாரமும் அதேபோல் வரும் ஞாயிற்றுக் கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் நேரடி வகுப்புகளை தொடங்குவது என்றும் அதன்பின் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications