கோபம்.. அமைச்சர் காந்தியை ஒருமையில் திட்டிய 2 இளைஞர்கள்.. ஒரே பரபரப்பு.. .தட்டித்தூக்கிய போலீஸ்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருப்பவர் ஆர் காந்தி. இவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒருமையில் 2 இளைஞர்கள் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். அமைச்சரை ஏன் ஒருமையில் திட்டினர் என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஆர் காந்தி. இவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அமைச்சர் ஆர் காந்தி கடந்த 21ம் தேதி ராணிப்பேட்டையில் இருந்து சென்னை சென்றார். அங்கு பணிகளை முடித்துவிட்டு அவர் காரில் மீண்டும் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அமைச்சருக்கு வந்த அழைப்பு
சென்னை காவேரிபாக்கம் அருகே அவரது கார் சென்றது. அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் 2 பேர் பேசினர். அவர்கள் இருவரும் அமைச்சர் ஆர் காந்தியிடம் தரக்குறைவாக பேசியுள்ளனர். அதாவது ‛‛ராணிப்பேட்டையை சேர்ந்த சாமுவேல் என்பவர் தங்களது வங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்த கடனை பெற்று தர வேண்டும்'' எனக்கூறியுள்ளனர்.

ஒருமையில் பேச்சு
மேலும், அமைச்சர் ஆர் காந்தியை அவர்கள் இருவரும் ஒருமையில் பேசி திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர் ஆர் காந்தியின் உதவியாளர் ராஜசேகர், கடந்த 21ம் தேதி காவேரிபாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது
இந்த விசாரணையில் அவர்கள் சென்னையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் ஆர் காந்தியை ஒருமையில் பேசிய இரு இளைஞர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பெயர்கள் என்ன?
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த கோகுல் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications