• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பச்சை துரோகம்".. ஜாலியாக இருந்த கள்ள ஜோடி.. திடீரென வந்து நின்ற 3 பேர்.. ரூமுக்குள் ஒரே களேபரம்..!

Google Oneindia Tamil News

சென்னை: 2 கொடூர கொலைகள் நடந்துள்ளன.. இரண்டுமே கள்ளக்காதல் அட்டகாசத்தால் நடந்துள்ளன.. அவைகள் குறித்து போலீசார் விசாரணைகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ளது பேரூரணி.. இங்கு வசித்து வந்தவர் கருப்பசாமி.. இவர் ஒரு லாரி டிரைவர். 36 வயதாகிறது.

மனைவி பெயர் கனகலெட்சுமி.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. லாரி டிரைவர் என்பதால், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றுவிடுவார் கருப்பசாமி..

வீட்டு பாடம் எழுதாத 5 வயது மகளை கை, கால்களை கட்டி கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்த கொடூர தாய் வீட்டு பாடம் எழுதாத 5 வயது மகளை கை, கால்களை கட்டி கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்த கொடூர தாய்

 லாரி டிரைவர்

லாரி டிரைவர்

எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவாராம்.. அப்படித்தான், 3 மாதங்களுக்கு பிறகு, கடந்த 7ந்தேதி கருப்பசாமி ஊருக்கு வந்துள்ளார்... நைட் வீட்டிலேயே சாப்பிட்டுள்ளார். பிறகு தூங்க சென்றுவிட்டார். ஆனால், விடிகாலையிலேயே, இவரை யாரோ கழுத்தறுத்து கொன்றுவிட்டார்கள்.. இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணையை துவங்கினர்.. எந்தவிதமான க்ளூவும் போலீசாருக்கு கிடைக்காமல் திணறினர்..

 கவலையே இல்லை

கவலையே இல்லை

காரணம், இவர் வெளியூரிலேயே பெரும்பாலும் இருந்ததால், அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் யாராவது எதிரிகள், விரோதிகள் இருக்கிறார்களா என்று விசாரித்து வந்தனர். அப்போதுதான், கணவனை பறிகொடுத்த கனகலட்சுமி, படுஜாலியாக காணப்பட்டார்.. ஒரு கவலையும் அவர் முகத்தில் இல்லை.. இதையடுத்து, அவர் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது.. அவரிடம் விசாரித்தபோது, பெரிதாக எதுவும் விஷயத்தை போலீசாரால் பெற முடியவில்லை..

கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

அதனால், அவரது செல்போனை ஆராய்ந்தனர்.. அதில், ஒரே ஒரு நபரிடமிருந்து மட்டும் அடிக்கடி போன்கள் வந்தது தெரியவந்தது. அந்த நபர் யார் என்ற விசாரித்தபோதுதான், அது கனகலட்சுமியின் கள்ளக்காதலன் என்பது தெரியவந்தது.. இதற்கு, கருப்பசாமியின் உறவினர்கள், கனகலட்சுமியின் கள்ளக்காதல் பற்றி புட்டுபுட்டு வைத்தனர்.. இந்த கள்ளக்காதல் விவகாரம் கருப்பசாமிக்கு முன்பே தெரியுமாம்.. கடந்த ஒரு வருடமாகவே, இந்த பிரச்சனை தம்பதிக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.. கள்ளக்காதலன் பெயர் ரவிச்சந்திரன்.. அவரும் ஒரு டிரைவராம்.

ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன்

கருப்பசாமி கண்டித்து, கனகலட்சுமிக்கு பிடிக்கவில்லை.. அதனால், ரவிச்சந்திரனிடம் சொல்லி தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.. 3 மாதம் கழித்து எப்போது கருப்பசாமி ஊருக்குள் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.. அதன்படியே கடந்த 7ம் தேதி வந்தபோது, அவருக்கு அன்றைய தினம் இரவு நிறைய விதவிதமாக சாப்பாடு போட்டுள்ளார் கனகலட்சுமி.. பிறகு கருப்பசாமி தூங்கியதும், ரவிச்சந்திரனை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்ய சொல்லி உள்ளார். வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமியை ரவிச்சந்திரன், கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார் என்பது தெரியவந்தது..

கனகலட்சுமி

கனகலட்சுமி

கணவனின் கழுத்தை ரவிச்சந்திரன் அறுக்கும்போது, கனகலட்சுமி அங்கேயே வாசலில் நின்று கொண்டிருந்தாராம்.. இப்போது இந்த ஜோடி கைதாகி ஜெயிலுக்குள் உள்ளது.. இதேபோல இன்னொரு கள்ளக்காதல் கொலை நடந்துள்ளது.. இது தெலுங்கானாவில் நடந்துள்ளது. காம ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மல்லையா... 62 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் நர்சவ்வம்மா. .. இவர்கள் விவசாயிகள்.. 2 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்.. அனைவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.. தனித்தனியாக வசித்து வருகிறார்கள்..

 ஜாலி - உல்லாசம்

ஜாலி - உல்லாசம்

இந்நிலையில் மல்லையாவுக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது. அந்த பெண்ணுடன் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்துள்ளார். இதனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மல்லையாவை எச்சரித்திருக்கிறார்கள்.. கண்டித்தும் வந்திருக்கிறார்கள். மாந்திரீகம் செய்து, தங்கள் வீட்டு பெண்ணை மயக்கி அடக்கி தன்பக்கம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வந்துள்ளனர்.. ஆனால், மல்லையா எதற்குமே அடங்கவில்லை..

 வெந்து போன உடல்

வெந்து போன உடல்

சம்பவத்தன்றும் அப்படித்தான் பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஜாலியாக இருந்திருக்கிறார்.. இதனால் கொந்தளித்து போன, பெண்ணின் குடும்பத்தினர், திடீரென ரூமுக்குள் திடுதிடுப்பென கதவை உடைத்துகொண்டு வந்துவிட்டனர்.. மல்லையாவை இழுத்துப்போட்டு அடித்து உதைத்திருக்கிறார்கள்... பிறகு பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து, மல்லையா மீது ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டனர்.. மல்லையா அங்கேயே தீயில் வெந்து இறந்துபோனார்.. இந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து, வழக்கு பதிவு செய்து, தீ வைத்து கொளுத்திய 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்..!

English summary
2 murder due to illegal relationship in thoothukudi and telangana கள்ளக்காதல் காரணமாக 2 கொலைகளை கொடூரமாக நடந்துள்ளன
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X