2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு! ஐ.நா.சபையின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம்!
சென்னை: 2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கிவிட்டது தமிழக அரசு.
சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் மக்கள் மத்தியில் விளம்பரம் மேற்கொள்வது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் மேம்பட அதிகாரிகளுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இறையன்பு வழங்கியிருக்கிறார்.

ஐ.நா. சபை
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களிடையே மக்காச்சோளம் தவிர்த்து, இதர சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.

சிறுதானியங்கள்
இக்கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களுக்கு மாதாந்திர வாரியாக செயல்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் விளம்பரப் பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. தற்போது பொது மக்களிடையே அரிசி உணவு அதிகரித்து, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டதால், சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.

நேரடி கொள்முதல்
கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கும் துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

வேளாண்மை பல்கலை
சிறுதானியங்களில் ஆராய்ச்சி பணி என்பது குறைந்து வருவதை சுட்டிக் காட்டி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுதானிய ஆராய்ச்சியில், கூடுதல் கவனம் செலுத்தி, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், தானியங்களின் சேமிப்புக் காலத்தினை கூட்டி மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருட்களின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் பல்கலைக் கழக விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications