சென்னை ஏர்போர்ட் ஷாக்.. 30 வயது நபரின் சூட்கேஸை திறந்ததுமே மஞ்சள் நிற விசித்திரம்.. அலறிய அதிகாரி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.. கோலாலம்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் பயணிகள் உடைமைகள் சோதிக்கப்பட்டன.. சந்தேகத்தின் பேரில் ஒருவரின் சூட்கேஸ் பரிசோதிக்கப்பட்டது.. இதில் மொத்தம் 49 அரிய உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது..
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.

கோலாலம்பூர் ஃபிளைட்டில் என்ன இது
அப்போது, சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுவிட்டு திரும்பிய அவரை நிறுத்தி, அவரது பெரிய சூட்கேஸ் மற்றும் கூடைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.. காரணம், அந்த உடைமைகளுக்குள் உயிருடன் கூடிய கொடிய விஷம் கொண்ட நாகப் பாம்புகள் மற்றும் ராஜ நாகங்கள் என மொத்தம் 34 உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதில் 6 நல்ல பாம்புகள், வட அமெரிக்காவின் கலிபோர்னியா வனப்பகுதியில் காணப்படும் 8 ராஜ நாகங்கள், ஒரு சிவப்பு சுருட்டைப் பாம்பு, இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 நீல நாக்கு பாம்புகள், 2 சதுப்பு நிலப் பாம்புகள் மற்றும் 10 நீர் உடும்புகள் ஆகியவை இருந்தன. உடனடியாக அந்த நபரைக் கைது செய்த அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட 34 உயிரினங்களையும் பறிமுதல் செய்தனர்.
கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்
இதற்கிடையே, தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. பயணிகள் அனைவரும் சென்ற பிறகு, கன்வேயர் பெல்டில் ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் நீண்ட நேரமாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தனர்.
அதில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்த அபூர்வ வகை குரங்குகள், இந்திய பனை அணில் மற்றும் விஷம் கொண்ட சிலந்திப் பூச்சிகள் என மொத்தம் 15 அரிய வகை உயிரினங்கள் இருந்தன.
சுங்கத்துறை அதிகாரிகளின் கடும் சோதனையைக் கண்டு அஞ்சிய மர்ம நபர், பிடிபடுவோம் என்ற பயத்தில் சூட்கேஸை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய அந்த நபரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டூர் விசாவில் வந்தவர்
பிடிபட்ட 49 உயிரினங்களையும் இந்தியாவுக்குள் கொண்டு வர அனுமதி இல்லாததாலும், அவை உரிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் கொண்டு வரப்படாததாலும், மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகளின் ஆலோசனையின்படி அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஏர் ஏசியா மற்றும் தாய் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் அனைத்து உயிரினங்களும் மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பெரும் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications