எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் கை.. சென்னை ஏர்போர்ட்டில் பரபர.. அந்தமான் குடும்பத்தின் பயணம் ரத்து!
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் விமானத்தில் ஏறச் செல்லும்போது எஸ்கலேட்டரில் சிக்கி சிறுவனின் கை நசுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்தமான் செல்லவிருந்த சிறுவனின் குடும்பத்தினர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் விமானம் தாமதமாக அந்தமான் புறப்பட்டது.
எஸ்கலேட்டரில் சிறுவனின் கை சிக்கிய சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

அந்தமான் குடும்பம்
அந்தமானை சேர்ந்தவர் ஐசக். இவர், தீபாவளி விடுமுறையில் தனது மனைவி மகன் மற்றும் 4 வயதுப் பேரக் குழந்தையுடன் தமிழ்நாட்டிற்கு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து நேற்று குடும்பத்துடன் அந்தமான் திரும்ப முடிவு செய்தனர். அதன்படி நேற்று பகல் 12.05 மணிக்கு சென்னையில் இருந்து தனியார் பயணிகள் விமானத்தில் அந்தமான் செல்ல சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர்.

எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் கை
போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்புச் சோதனை உள்பட அனைத்து சோதனையும் முடித்தனர். பின்னர் விமானத்தில் ஏற எஸ்கலேட்டர் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஐசக்கின் 4 வயது பேரன் ஜெய்டனின் இடது கை விரல்கள் எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது. இதனால், வலியில் சிறுவன் அலறித் துடிக்க, சிறுவனின் குடும்பத்தினர் பதறிப்போயினர்.

ஓடிவந்த விமான ஊழியர்கள்
இதையடுத்து, உடனடியாக விமான ஊழியர்கள் எஸ்கலேட்டரை நிறுத்தினர். அதோடு சிறுவன் ஜெய்டன் உட்பட ஐசக் குடும்பத்தினரை, எஸ்கலேட்டரில் இருந்து இறக்கினர். சென்னை விமான நிலைய மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

விமானம் தாமதம்
இதையடுத்து, ஐசக் குடும்பத்தினர் அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் காரணமாக அந்தமான் செல்ல வேண்டிய விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.45 மணிக்கு சென்னையிலிருந்து அந்தமான் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications