எங்களுக்கு டவுட்.. இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு ஏன்? அத்தனை டாக்டர் எப்படி? தவெக வழக்கறிஞர் கேள்வி
மதுரை: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்திய முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் இரவோடு இரவாக கரூர் வந்ததோடு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் கரூரில் விஜயின் உரையை கேட்க பெரும் கூட்டம் திரண்ட நிலையில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயங்கி கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலிருந்தே பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலோனோர் வழியிலேயே உயிரிழந்தனர்.
தற்போது கிடைத்த தகவலின் படி, 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.

ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்குறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கரூர் மற்றும் அதனைச் சுற்றி இருந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
-
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications