5 கிலோ கேஸ் சிலிண்டர்.. அட்ரஸ் ப்ரூஃப் வேண்டாமா? டெபாசிட்? இந்த 1 ID கார்டு போதும்.. குட் நியூஸ்
சென்னை: 5 கிலோ எடை கொண்ட சிறிய எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவதற்கு நீண்ட காத்திருப்புகளோ அல்லது சிக்கலான ஆவண நடைமுறைகளோ இனி தேவையில்லை. ஒரு சாதாரண அடையாள அட்டையை மட்டும் காண்பித்து, உடனடி இணைப்பாக இந்தச் சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
சாதாரண மக்களுக்கு, குறிப்பாக வேலை நிமித்தமாகத் தற்காலிகமாக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு, புதிய கேஸ் கனெக்ஷன் பெறுவது என்பது இமாலய சவாலாக இருந்து வந்தது.

இதற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான முகவரிச் சான்றைச் (Address Proof) சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதே ஆகும்.
5 கிலோ எல்பிஜி சிலிண்டர்
இந்த எதார்த்தமான சிக்கலை உணர்ந்த எண்ணெய் மார்க்கெட் நிறுவனங்கள், தங்களின் சந்தைப்படுத்தல் விதிகளைத் தளர்த்தியுள்ளன. புதிய நடைமுறையின்படி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் என அரசு அங்கீகரித்த ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச் சான்றை மட்டும் வழங்கினால் போதுமானது. இதன் மூலம் சந்தை விலையிலேயே 5 கிலோ சிலிண்டர்களை எவ்வித சிரமமுமின்றி மக்கள் வாங்க முடியும்.
சந்தையில் "சோட்டு" (Chhotu) என்ற செல்ல பெயரில் அழைக்கப்படும் இந்தச் சிறிய ரக சிலிண்டர்கள், மக்கள் எளிதில் அணுகக்கூடிய பெட்ரோல் பங்குகள், உள்ளூர் மளிகைக் கடைகள் மற்றும் கேஸ் விநியோகஸ்தர்களிடம் தாராளமாகக் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தின் அச்சாணியே, இருப்பிடச் சான்று கட்டாயமில்லை என்பதுதான். இதனால் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினரும், தற்காலிகமாக ஓரிடத்தில் வசிப்பவர்களும் பெரும் பயன் பெறுவார்கள்.
எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள்
இந்தத் திட்டத்தின் செயல்முறை மிகவும் எளிமையானது. ஆரம்பத்தில் புதிய சிலிண்டருக்கான வைப்புத்தொகை மற்றும் எரிவாயுவின் விலையை செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு, சிலிண்டர் காலியானதும் அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வெறும் எரிவாயு கட்டணத்தை மட்டும் செலுத்தி ரீஃபில் செய்து கொள்ளலாம்.
இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஒரு நபர் அந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு மாறும்போது, சிலிண்டரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இது புலம் பெயர் தொழிலாளர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் உதவியாக இருக்கும்.
அடையாள சான்றுகள்
வழக்கமான பெரிய சிலிண்டர்களுக்கு முகவரிச் சான்று இன்றும் அவசியமாக உள்ள நிலையில், இந்தச் சிறிய சிலிண்டர் திட்டம் விளிம்புநிலை மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
அதுமட்டுமல்லால், கள்ளச் சந்தையில் விற்கப்படும் சட்டவிரோத சிலிண்டர்களைத் தடுப்பதும், மக்கள் பாதுகாப்பான முறையில் தரமான எரிவாயுவைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். விநியோகஸ்தர்கள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, ரசீதுகளுடன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடையாள அட்டை இருந்தால் போதும் என்ற இந்த எளிய விதிமுறை மாற்றத்தால், இனி வரும் நாட்களில் 5 கிலோ சிலிண்டர்களுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவையை விரைவாகவும் எளிமையாகவும் பூர்த்தி செய்யும் இந்த முயற்சி, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....!!
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல்












Click it and Unblock the Notifications