Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வேலி"தாண்டும் வெள்ளாடுகள்?.. முடிஞ்சு போச்சு போல.. சைலண்ட் ஓபிஎஸ் Vs எகிறி எகிறி அடிக்கும் எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்ற கருத்து எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உண்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? அல்லது ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "எடப்பாடி பழனிசாமி, தைரியம் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி, நிரந்தர பொது செயலாளராக தொண்டர்களை வைத்து தேர்வாகப்பட்டும். பச்சோந்தி போல செயல்பட்டு முதல்வர் பதவிக்கு வந்த பிறகு, சொந்த நலனுக்காக கட்சியை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி...

திமுகவுக்கு ஓபிஎஸ் கூட்டு என்று சொல்லும் ஜெயக்குமார், அந்த கேள்வியை முனுசாமியிடம் கேட்க வேண்டும்... பெட்ரோல் பங்க் வைக்க, நிலம் குத்தகைக்கு எடுக்க திமுகவிடம் விலை போனவர் முனுசாமி தான்.. விரைவில் 50,000 தொண்டர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவார்" என்றார்.

 பழனிசாமி கணக்கு

பழனிசாமி கணக்கு

ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அந்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்பட்டு வரும் சூழலில், பிரம்மாண்டமான மெஜாரிட்டி எடப்பாடிக்கு கட்சியில் உள்ளதாக சொல்லப்பட்டு வரும், உண்மையிலேயே ஓபிஎஸ் + எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு என்ன? யாருக்கு ஓரளவு அதிக செல்வாக்கு இருக்கிறது? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது:

 பெஞ்ச் கறார்

பெஞ்ச் கறார்

"பெஞ்ச் தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு இப்போதைக்கு நிம்மதியை தரலாம்.. ஆனால் இயல்பு அப்படி இல்லை.. ஓபிஎஸ்ஸூக்கு மன்னிப்கே கிடையாது என்று பேசி வருகிறாரே.. இவரைவிட பெரிய செல்வாக்கு பெற்றவர் ஜெயலலிதா.. ஆனானப்பட்ட ஜெயலலிதாவே, அன்று தன்னை எதிர்த்து செயல்பட்ட ஆர்எம் வீரப்பனை மன்னித்து, மந்திரி பதவியை தரவில்லையா? ஜெ. அளவுக்கு தன்னை செல்வாக்கு பெற்றவராக எடப்பாடி நினைத்து கொண்டிருக்கிறார்.. கட்சியும் ஒன்றாக இல்லை.. பிளவுபட்ட கட்சியை வைத்து கொண்டு, யாரையும் மன்னிக்க மாட்டேன் என்று பேசுவது சரியில்லை..

 2500+ பேர்

2500+ பேர்

தொண்டர்களை மதிக்கிறேன் என்று சொல்கிறாரே, எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்.. அதை எடப்பாடி செய்வாரா? 2500+ பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கும் தைரியத்தில் பேசுகிறார் எடப்பாடி.. ஆனால், லட்சோப லட்சம் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான முக்கியம்.. இன்னும் கோர்ட் உத்தரவும் வரவில்லை.. சுப்ரீம்கோர்ட் என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை.. தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை.. பாஜக மேலிடம் என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை..

 சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

இவ்வளவும் சஸ்பென்ஸாக உள்ளபோது, மிகப்பெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக எடப்பாடி நினைத்து கொண்டிருக்கிறார்.. கொங்கு மற்றும் மத்திய வடமாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.. அவ்வளவுதான்.. அதுவும், அன்றையதினம் அன்று அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவும் இருந்தனர்.. கொங்குவில் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது.. வடமாவட்டத்திலும் பாமகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதனால், ஒட்டுமொத்த கொங்கு மண்டல ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே என்று நினைக்கக்கூடாது..

 பாயிண்ட்

பாயிண்ட்

இன்று பாமக, பாஜக, ஓபிஎஸ் டீம் இல்லாமல், எடப்பாடியே மறுபடியும் இங்கு தனித்து போட்டியிட்டால்தான், அவருடைய உண்மையான செல்வாக்கு தெரியவரும்.. அதுவும், இப்போது திமுக கொங்குவில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.. அப்படி இருக்கும்போது, எடப்பாடிக்கு முந்தைய செல்வாக்கு என்பது இப்போது கிடையாது என்பதே உண்மை..

 வெள்ளாடுகள்

வெள்ளாடுகள்

இப்போது இருக்கும் அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் ஆதாயத்துக்காக இருக்கிறார்கள்.. அதேபதவியை அவர்கள் எங்கு தந்தாலும் அணி தாவுவார்கள்.. அதற்கான விலையை தந்தாலும் செல்வார்கள்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி இணைந்து செயல்பட்டால், தென்மண்டலத்தில் எடப்பாடிக்கு அந்த செல்வாக்குகூட இல்லை.. அதனால் எடப்பாடிக்கு அதிமுகவுக்குள் ஆதரவு இருப்பதாக சொல்வது கானல் நீர்தான்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+