நீங்க நல்லவரா? கெட்டவரா? உலக அளவில் பேமஸான நித்யானந்தா! சாமியரா? கபடதாரியா? வெளியான ஆவணப்படம்..!
சென்னை : பாலியல் புகார் கடத்தல் பணமோசடி வழக்கு என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா கோமா நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் நல்லவரா கெட்டவரா என்பது குறித்து டிஸ்கவரி பிளஸ்ஸில் ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த குழப்பமான தகவல் உலா வருகின்றன. கல்லீரல் அழற்சி, நுரையீரல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை ஆகியவற்றால் அவர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாமியார் நித்யானந்தா
நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் சிகிச்சைக்காக இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது அதே நேரத்தில் நித்தியானந்தா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது சிஷ்யர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அவர் சமாதி நிலையில் இருப்பதால் விளக்கேற்றி வழிபடுமாறு கூறினர்.

கோமாவில் நித்யானந்தா
தற்போது அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது பொய்யானது என்றும் தான் சமாதி நிலையில் இருக்கிறேன் விரைவில் மீண்டு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவேன். தன்னை வெறுப்பவர்கள் குறித்து கவலைப்பட போவதில்லை பக்தர்கள் தன்னைப்பற்றி பரவும் வதந்திகள் குறித்து நம்ப வேண்டாம் என நித்தியானந்தா இறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் சாமியார் நித்தியானந்தா குறித்த ஆவணப்படம் ஒன்றை பிரபல நிறுவனமான டிஸ்கவரி பிளஸ் வெளியிட்டுள்ளது.

நித்யானந்தா ஆவணப்படம்
My Daughter Joined a Cult என்ற பெயரில் நித்யானந்தா குறித்த வெளியாகியுள்ள ஆவணப்படத்தினை நமன் சரைய என்பவர் இயக்கியுள்ள நிலையில், வைஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து உள்ளது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு ,கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தில் நித்தியானந்தாவின் கடந்தகால வாழ்க்கை, திருவண்ணாமலையில் சாதாரண சாமியாராக இருந்து அவர் பின்பு எப்படி இவ்வளவு பிரபலமான மனிதராக உருவாகினார் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

சுவாரசிய தகவல்கள்
மேலும் அவர் தன்னிடம் வந்த பக்தர்களை தன் வசப்படுத்தியது எப்படி?, அவர்களை எந்த மாதிரி துன்புறுத்தினர், அவர்களை ஏமாற்றியது, பாலியல் புகார், தலைமறைவு வாழ்க்கை, புகார்கள், மோசடிகள், நல்ல பக்கங்கள், ஞானம் , மொழித்திறன், உலக அறிவு, பிடதி உள்ளிட்ட உலகமெங்கும் பல பகுதிகளில் ஆசிரமம் அமைத்து எப்படி என்பது குறித்து விரிவாக இந்த ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த ஆவணப்படத்தில் சாமியார் நித்தியானந்தாவை குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என கூறப்படுகிறது.
Recommended Video

வெளியான ட்ரைலர்
மேலும் நித்யானந்தா குறித்த தகவல்களை அவரிடம் சீடராக இருந்தவர்கள், பக்தர்கள், தற்போது இருக்கும் சீடர்கள், பிரபல பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ஆவணப் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் நித்தியானந்தா மில்லியன் கணக்கானவர்கள் நேசிக்க படுகிறாரா மில்லியன் கணக்கானவர்கள் வெட்கப்படுகிறார்கள் சாமியாரா அல்லது சாதாரண மனிதரா என பல கேள்விகளோடு வெளியாகியிருக்கும் இந்த ட்ரைலரை பகிர்ந்து வருகின்றனர்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications