“சின்னக் கலைவாணர் விவேக் சாலை”.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..!
சென்னை : சென்னையில் நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற விவேக் மனைவியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் சூட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் விவேக்.
காமெடி மூலம் சமூக கருத்துகளையும் கொண்டு சென்ற அவர் தமிழக மக்களால் சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்பட்டார்.

நடிகர் விவேக்
இந்நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக விவேக் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

மனைவி கோரிக்கை
அதில் நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.தமிழக அரசும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும் நடிகர் விவேக்கின் மனைவி வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும் விவேக்கின் ரசிகர்களும் இருந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அரசாணை வெளியீடு
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். மிகவும் சிறந்த நடிகரான விவேக்கின் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டுள்ளார். வரும் மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது" என்று கூறினார்.

வேகமாக பரவும் புகைப்படம்
சென்னையில் நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற விவேக் மனைவியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் சூட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை கோடம்பாக்கம் மண்டலம் 128வது வார்டில் நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு நேற்று "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சாலையின் புதிய பெயர் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications