இப்படியொரு திட்டம் தமிழ்நாட்டை தவிர எங்குமே இல்லை.. ஸ்டாலினை வியந்து பாராட்டிய ஆ ராசா
சென்னை: தமிழகத்தில் தற்போது தலைசிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பேருந்தில் மகளிருக்கு இலவச பயண திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என என சத்தியமங்கலத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசினார்.
Recommended Video
ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பாமகவும், உள்ளிட்ட எந்த கட்சியும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆட்சியை குறை சொல்ல முடியாது என்றும் ஆ ராசா கூறினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை துவங்கி வைத்ததோடு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் மட்டுமே
புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆ.ராசா பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது தலைசிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பேருந்தில் மகளிருக்கு இலவச பயண திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

அதிமுகவால் முடியாது
ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, உள்ளிட்ட எந்த கட்சியும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி ஆட்சியை குறை சொல்ல முடியாது.

ஸ்டாலின் முதலிடம்
இந்தியா டுடே என்ற ஆங்கில பத்திரிக்கை இந்தியாவிலேயே எந்த முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என மதிப்பெண் போட்ட பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முதலிடம் பிடித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என பெரியார் கனவு கண்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதற்கு ஏற்பட்ட தடை எல்லாம் விலக்கி இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பட்டவர் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

நிதி நிலைமை
இந்தாண்டு போடப்பட்டு இருக்கிற பட்ஜெட் ஒரு குறை பட்ஜெட். ஏனென்றால் இதற்கு முந்தைய பட்ஜெட் எடப்பாடி அரசாங்கம் போட்டுவிட்டுச் சென்றது. இருக்கின்ற நிதி நிலைமையை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை அறிவிப்பதில் சில சிரமங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவைப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பெற்றுத் தருவேன்" இவ்வாறு ஆ ராசா பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications