சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனி சக்கர..மீட்டிங்கில் மிஸ்ஸான மாஜி ‘பொருளாளர்’! குரூப்புல டூப்பு போடும் ‘வாசனை’! இதுதான் காரணமா?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை விட தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பொருளாளர் பதவி தொடர்பாக தனது ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் தான் பெரும் தலைவலியாக உள்ளது.

ஒரே பதவிக்கு பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் நிர்வாகிகள் முட்டி மோதி வருவதால் தான் தென் மாவட்டத்தைச் சேர்ந்த 'ஸ்வீட்' வாசனை பெயர் கொண்ட முன்னாள் அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் உடல்நிலை சரியில்லை என கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது வெடித்த ஒற்றை தலைமை விவகாரம் பொதுக்குழு கூட்டத்தில் விசுவரூபம் எடுத்தது. கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து இருப்பதையே நடந்து முடிந்த சம்பவங்கள் காட்டின.

அப்படி போடு.. நான் இனி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை! ட்விட்டரில் அப்படி போடு.. நான் இனி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை! ட்விட்டரில்

எடப்பாடி பழனிசாமி தரப்பு

எடப்பாடி பழனிசாமி தரப்பு

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி நடத்துவதற்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படவுள்ளார். ஓபிஎஸ்ஸிடம் இருக்கக்கூடிய பலமான பதவிகள் 2. அதிமுகவில் பொருளாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி. அவற்றில் முதலில் அதிமுக பொருளாளர் என்ற பதவியை அவரிடமிருந்து பறிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் தற்போதே தொடங்கியுள்ளன.

பொருளாளர் பதவி

பொருளாளர் பதவி

ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி எடப்பாடி தீவிர ஆதரவாளர்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அதற்குப்பிறகு யாருக்கு வழங்குவது என்ற விவாதம் தற்போது அதிமுகவில் எழத் தொடங்கியுள்ளது. எடப்பாடி தரப்பில் உள்ள பல மூத்த முன்னாள் நிர்வாகிகளும் எப்படியாவது அதிமுக பொருளாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என வேலைகளை துவங்கி உள்ளனர்.

நிர்வாகிகள் போட்டி

நிர்வாகிகள் போட்டி

பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அதற்குப்பிறகு யாருக்கு வழங்குவது என்ற விவாதம் தற்போது அதிமுகவில் எழத் தொடங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம், பொன்னையன், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் அடிபடுகிறது.

சற்றே மனவருத்தம்

சற்றே மனவருத்தம்

அதிமுகவில், சவுந்திரபாண்டி, துரைராஜ், பண்ருட்டி ராமச்சந்திரன், திருப்பத்தூர் மாதவ, கண்ணப்பன், , திண்டுக்கல் சீனிவாசன், டிடிவி தினகரன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த பதவிகளை வகித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் நீண்ட காலத்துக்குப் பிறகு அதிமுக பொருளாளர் பதவிக்கான மோதல் மீண்டும் உருவாகியிருக்கிறது. இதனால் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளே அவர் மீது சற்றே மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மூத்த முன்னாள் அமைச்சர்கள்

மூத்த முன்னாள் அமைச்சர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மூத்த முன்னாள் அமைச்சர்கள் பொருளாளர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என கூறி உள்ளனர். அப்போது தென் மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ள ஊரைச் சேர்ந்த வாசனையான பெயர் கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு பொருளாளர் பதவியை வழங்க வேண்டும் என லேசாக போட்டு வாங்கலாம் என பேசியுள்ளார். இதனை எதிர்பார்க்காத எடப்பாடி பழனிச்சாமி, "அண்ணே சும்மா இருங்கண்ணே, அப்புறமா பாத்துக்கலாம்" என எதார்த்தமாக கூறியுள்ளார்.

Recommended Video

    OPS-ன் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை... Edappadi தலைமை அவசியம் - KP Munusamy *Politics
    கிளம்பிய யூகம்

    கிளம்பிய யூகம்

    அந்த ஆலோசனையின் போது ஜெயக்குமாரின் பெயரும் சிவி சண்முகத்தின் பேரும் பலமாக அடிபட்டதால் தனக்கு பதவி கிடைக்காது என அதிருப்தியில் இருந்த அந்த மூத்த முன்னாள் அமைச்சர் அன்றிரவே தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளார். அடுத்த நாள் நடைபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ள முடியாது என கடிதம் அனுப்பிய அவர், அப்போது நடைபெற்ற தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பட்டுச்சட்டை சகிதமாக உற்சாகமாக கலந்து கொண்டார். இதனால் அவர் எடப்பாடி தரப்பு மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருவதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    English summary
    Edappadi Palaniswami's biggest headache is the conflict between his supporters over the post of treasurer rather than the single leadership issue in the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X