ஏசியுடன் ஃபேன் போட்டால் கரண்ட் பில் குறையுமா? ACயை எப்போது பயன்படுத்தினால் பணம் மிச்சமாகும்! டிப்ஸ்
சென்னை: கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே பலரது வீடுகளிலும் ஏசி இயந்திரங்கள் ஓயாமல் ஓடத் தொடங்கிவிடும்.. ஆனால் மாத இறுதியில் வரும் மின்சார கட்டணத்தை பார்த்தால் பலருக்கும் லேசாக ஜெர்க் ஆகிவிடும்.. அந்த அளவுக்கு பில் எகிறிவிடும்.. ஏசியை பயன்படுத்திக்கொண்டே மின்சார செலவை எப்படி கட்டுப்படுத்துவது என்ற கேள்வி பல குடும்பங்களிலும் எழுகிறது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
ஏசியுடன் சேர்த்து மின்விசிறியை பயன்படுத்தலாமா? ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது ஏன் மீண்டும் மின்விசிறியை இயக்க வேண்டும் என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் இதன் பின்னால் ஒரு எளிய அறிவியல் காரணம் இருக்கிறது..

கரண்ட் பில் சேமிப்பு
ஏசியை 24 அல்லது 26 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்துவிட்டு அதே நேரத்தில் சீலிங் ஃபேனை மிதமான வேகத்தில் ஓடவிட்டால் அறையில் உருவாகும் குளிர்ந்த காற்று சமமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது..
ஏசி மட்டும் இயங்கும்போது அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே குளிர்ச்சியை அதிகமாக உருவாக்கும்.. ஆனால் மின்விசிறி இயங்கும்போது அந்த குளிர்ந்த காற்று அறையின் மூலை முடுக்கெல்லாம் விரைவாக பரவுகிறது.. இதனால் அறை முழுவதும் ஒரே மாதிரியான குளிர்ச்சியை பெற முடிகிறது..
இந்த நிலை ஏற்பட்டால் ஏசி கம்ப்ரஸர் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் குறையும்.. குளிர்ச்சி விரைவாக கிடைப்பதால் கம்ப்ரஸர் இடையிடையே நிற்கும்.. இதனால் மின்சார நுகர்வு கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது..
ஏசி + ஃபேன் போடலாமா
அடுத்ததாக ஏசியை எந்த நேரத்தில் பயன்படுத்துவது நல்லது என்ற கேள்வியும் பலரிடம் உள்ளது.. பொதுவாக பகல் நேரங்களில் சூரியன் அதிகமாக வெப்பத்தை கொடுப்பதால் வீட்டு சுவர்கள் மற்றும் கூரை வெப்பத்தை சேமித்து வைத்திருக்கும்.. அந்த நேரத்தில் ஏசியை இயக்கினால் அந்த வெப்பத்தையும் தணிக்க ஏசி இயந்திரம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.. இதனால் மின்சாரம் அதிகமாக பயன்படுத்தப்படும்..
எனவே பகல் நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திரைச்சீலைகளால் மூடி வைத்து அறைக்குள் நேரடி வெப்பம் வராமல் தடுப்பது நல்லது.. இது அறையின் வெப்பநிலையை ஒரு அளவு வரை கட்டுப்படுத்த உதவும்.. மாலை அல்லது இரவு நேரங்களில் வெளிப்புற வெப்பநிலை குறைவாக இருக்கும்.. அந்த நேரத்தில் ஏசியைப் பயன்படுத்தினால் அறை மிக விரைவாக குளிர்ச்சியடையும்.. இதனால் ஏசி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் குறையும்..
மின்சார கட்டணம்
மேலும் இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் ஏசியை இயக்கி, நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் தானாகவே அணையும்படி டைமர் அமைத்து கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற மின்சாரச் செலவை தவிர்க்க முடியும். அதேபோல் ஏசியின் ஃபில்டர்களை மாதம் ஒருமுறை சுத்தம் செய்வதும் மிகவும் முக்கியமானது.. ஃபில்டரில் தூசி மற்றும் அழுக்கு தேங்கிவிட்டால் காற்றை உள்ளிழுக்க ஏசி அதிக சக்தி பயன்படுத்த வேண்டியிருக்கும்..
பலர் ஏசியை ஆன் செய்தவுடன் 18 டிகிரியில் வைத்தால் ரூம் சீக்கிரம் ஜில்லென்றாகிவிடும் என்று நினைப்பார்கள்.. ஆனால் அப்படி செய்யக்கூடாதாம்.
ஏசி - மின்விசிறி
24 அல்லது 26 டிகிரியில் வைத்தாலும் ஏசி மிஷின் தனது திறனைப் பொருத்தே குளிர்ச்சியை வழங்கும்.. ஆனால் 18 டிகிரியில் வைத்தால் அந்த அளவுக்கு குளிர்ச்சி அடைய நீண்ட நேரம் இயங்க வேண்டியிருக்கும்.. இதனால் மின்சார நுகர்வு அதிகரிக்கும்..
எனவே 24 டிகிரிக்கு மேல் வைத்துக் கொண்டு ஏசியுடன் ஃபேனுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.. புத்திசாலித்தனமான முறையாகும்.. இதுபோன்ற சின்ன சின்ன மாற்றங்களை பின்பற்றினால் கடும் கோடைக்காலத்திலும் உங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.. அதே நேரத்தில் மாத இறுதியில் வரும் மின்சாரக் கட்டணமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்...!!
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications