மையத்திலிருந்து விலகும் மய்யம்! எல்லாம் தமிழகத்தை மறக்கத்தான்! காங்கிரஸுடன் நெருக்கம் காட்டும் கமல்!
சென்னை : நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் கமல்ஹாசன் தேசிய திராவிட கட்சிகளுக்கு மாற்று என மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த நிலையில் தற்போது காங்கிரஸ் உடன் நெருக்கம் காட்டி வருவது தேசிய அளவில் கவனத்தை பெற்றிருக்கிறது
திடீரென மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறார் கமல்ஹாசன். தமிழக அரசியலை விடுத்து திடீரென டெல்லி அரசியலுக்குள் புகுந்திருக்கும் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
ராகுல் நடத்தும் தேச ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்று இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அவருடன் நெருக்கம் காட்டி வருவது தமிழகம் மட்டுமல்லாது டெல்லி அரசியல் நிபுணர்களையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.

கமல்ஹாசன்
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரை பயணம், நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை தாண்டி பயணித்து வருகிறது. 5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அரசியல் எனும் மேக்கப் போட்டார் கமல்ஹாசன். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.

அரசியல் பாதை
இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமல்ஹாசன் மேற்கொள்ளாததால் பல கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

காங்கிரஸுடன் நெருக்கம்
கீழ்மட்ட நிர்வாகிகள் கட்சியில் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என குழம்பிப் போயிருக்கின்றனர். இந்நிலையில் திடீரென திடீரென மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறார் கமல்ஹாசன். தமிழக அரசியலை விடுத்து திடீரென டெல்லி அரசியலுக்குள் புகுந்திருக்கும் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.

ராகுல் காந்தி
ராகுல் நடத்தும் தேச ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்று இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அவருடன் நெருக்கம் காட்டி வருவது தமிழகம் மட்டுமல்லாது டெல்லி அரசியல் நிபுணர்களையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது உண்மையில் கமல் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டுவதன் பின்னணி என்ன? என பல்வேறு யூகங்கள் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தியின் பேரணியில் பேசிய கமல்ஹாசன் காந்தியின் கொள்ளு பேரனும் நேருவின் கொள்ளு பேரனும் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் என்பதோடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன் என கொந்தளித்து பேசினார்.

மய்யமே கொள்கை
கட்சி ஆரம்பித்தபோது இடதுமில்லை வலதும் இல்லை மய்யமே கொள்கை என்ற முழக்கத்துடன் அரசியல் பிரவேசம் செய்த கமல்ஹாசன் தற்போது காங்கிரஸ் திமுக கூட்டணி நோக்கி நகர்வதாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டி வரும் கமலஹாசன் அதனை வைத்து திமுகவில் கூட்டணிக்கு அட்சரம் போட்டு வருகிறார். இதை அடுத்து காங்கிரஸ் மூலம் கமலை கூட்டணிக்குள் அழைத்துவரும் ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் இல்லை என்றாலும் ஓரளவு வாக்கு வங்கி வைத்திருக்கும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓரளவு பலமாக இருக்கும்.

கூட்டணிக்கு அட்சாரம்
மேலும் கமலின் பிரச்சாரம் தேர்தல் நேரத்தில் கை கொடுக்கும் என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ் திமுக தரப்பு கூட்டணிக்கு அழைத்து வர தயாராக இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி குறித்த வியூகங்கள் வகுப்பதற்காகவே டெல்லியில் கமல்ஹாசன் முகாமிட்டிருக்கிறார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். சினிமா போல அரசியல் வானில் தனி நட்சத்திரமாக கமல்ஹாசன் ஜொலிப்பாரா அல்லது சிரஞ்சீவி போல ஜோதியோடு ஐக்கியமாகி விடுவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
-
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications