என்ன பெரிய சூப்பர் ஸ்டார்..சுப்ரீம் ஸ்டார் தெரியுமா? செய்தியாளரிடம் சூடான சரத்! அவருக்கு என்ன கோபமோ?
சென்னை : இன்று வாரிசு படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போது விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கடுமையாக கோபமடைந்துள்ளார் சரத்குமார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், படம் வெளியான பிறகு யார் படம் ஹிட் என மோதல் எகிறியுள்ளது.

வாரிசு - துணிவு
இரு படங்களுமே வெற்றி பெற்றுள்ளது.. இரண்டுமே நன்றாக உள்ளது என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர். விஜய் படத்தின் பாடல்கள் வெளியான போது அது யூட்யூப் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் அந்த பாடல்களை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

நம்பர் ஒன்
இதை அடுத்து துணிவு படத்தின் பாடல்கள் வெளியான போதும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ததோடு துணிவு படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் டிரைலர் போல் இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் இரு படங்களின் பாடல்களும் நன்றாகவே இருக்கிறது என்பது தான் உண்மை. இதற்கிடையே வாரிசு படத்தின் விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று பற்ற வைத்தார். அதற்கு முன்னதாகவே நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறியதும் சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்றவைத்தது.

சரத்குமார்
போதாக்குறைக்கு நடிகர் சரத்குமாரும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார்,"சூரியவம்சம் பட விழாவில் பேசிய போதே எதிர்காலத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சொன்னேன். அது நிறைவேற்றிவிட்டது. இப்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார்" என கூறினார். இதையடுத்து ரஜினி ரசிகர்களும் மற்றும் பொதுவான ரசிகர்களும் சரத்குமாரை விமர்சிக்க தொடங்கினர்.

திடீர் கோபம்
மேலும் இது தொடர்பாக கடும் விமர்சனங்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் இன்று வாரிசு படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போது விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த சரத்குமார்," என் மகனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார்.. எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார்..

சுப்ரீம் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் என்ற விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்திலேயே இதுதான் பெரிய பிரச்சனை போல நீங்கள் ஆக்கிவிட்டீர்கள். நான் விஜயை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன் முதலமைச்சர் ஆவார் பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் என்பது ஒரு டைட்டில் அவ்வளவுதான். நான் சுப்ரீம் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் பெருசா சுப்ரீம் ஸ்டார் பெருசா?" என கடுமையாக பதில் அளித்து விட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி












Click it and Unblock the Notifications